ஏப்ரல் 2-ம் தேதி தமிழகத்துக்கு கூடுதலாக 10 லட்சம் கரோனா தடுப்பு மருந்துகள் வர உள்ளன: ராதாகிருஷ்ணன்

By செய்திப்பிரிவு

ஏப்ரல் இரண்டாம் தேதி தமிழகத்தில் கூடுதலாக 10 லட்சம் கரோனா தடுப்பு மருந்துகள் வர உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “தமிழகத்தில் உருமாறிய கரோனா பாதிப்பு இல்லை. பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் 512 இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கரோனா தடுப்பூசி போட வேண்டும். மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தானாக மருந்துகளை சாப்பிட கூடாது.

நம்மிடம் தற்போது 14 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் உள்ளன. ஏப்ரல் இரண்டாம் தேதி கூடுதலாக 10 லட்சம் கரோனா தடுப்பு மந்துகள் வரவுள்ளன” என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் இரண்டாம் வாரம் முதலே கரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்