நாராயணசாமியின் தனிப்பட்ட ஈகோவால் புதுச்சேரி வளர்ச்சி பின்னோக்கி சென்றுள்ளது: நமச்சிவாயம் குற்றச்சாட்டு

By செ. ஞானபிரகாஷ்

நாராயணசாமியின் தனிப்பட்ட ஈகோவால் புதுச்சேரி வளர்ச்சி 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளதாக, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரியில் இன்று (மார்ச் 26) பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:

"தாழ்ந்த நிலையிலுள்ள புதுச்சேரியை தலை நிமிர செய்கிறது பாஜக. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலர போவது உறுதி. மோடி பார்வை புதுச்சேரியின் மீது பட்டுள்ளதால் வளர்ச்சி அடையும்.

கடந்த முறை காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை முன்னாள் முதல்வராக உள்ள நாராயணசாமி 2016-ல் என்னுடைய பெயரில் வெளியிட்டார். அன்று ஒரு மகத்தான வெற்றியை புதுவை மக்கள் கொடுத்தார்கள். அந்த வாக்குறுதிகளில் எதையாவது அவரால் நிறைவேற்ற முடிந்ததா என்றால் எதுவும் இல்லை.

அதற்கு முக்கியக்காரணம் துணைநிலை ஆளுநருடன் அவர் போட்ட சண்டைதான். முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் தனிப்பட்ட ஈகோவால் புதுச்சேரியின் வளர்ச்சி 20 ஆண்டுக்கு பின்னோக்கி சென்றுள்ளது. நாராயணசாமி பொய்யை மட்டுமே நம்பியுள்ளார். அதையே தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். ஆனால், நாராயணசாமியை நம்ப மக்கள் தயாராக இல்லை.

காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் ஏமாற்றியது. நாங்கள் அவை அனைத்தையும் நிறைவேற்றுவோம். இது தேர்தல் பிரச்சார பேச்சு மட்டுமல்ல. மக்கள் உணர்வை புரிந்து தேர்தல் வாக்குறுதிகளாக தயாரித்துள்ளோம். பிரதமர் கனவு நனவாகும் விதத்தில் செயல்படுத்தப்படும், தாமரை மலரும், புதுச்சேரி ஒளிரும்".

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, மாநில தலைவர் சாமிநாதன் கூறுகையில், "கடந்த காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. 20 ஆண்டுகளுக்கு பின்நோக்கி சென்றுள்ள புதுச்சேரியை குஜராத் போல் வளர்ச்சி அடைய செய்வோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி, மாநிலத்தில் கூட்டாட்சி என்று செயல்படுவோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்