ரஜினி அரசியலுக்கு வராதது ப்ளஸ்ஸா அல்லது மைனஸா என்ற கேள்விக்கு கமல் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயகுமார், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள்.
கோவை தெற்கு தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன். அங்கு வாக்குச் சேகரிப்புக்கு இடையே 'இந்து தமிழ் திசை' யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் "ரஜினி அரசியலுக்கு வராதது ப்ளஸ்ஸா, மைனஸா" என்ற கேள்விக்கு கமல் கூறியிருப்பதாவது:
"இரண்டுமே இல்லை. ரஜினி வந்திருந்தால் நண்பர் ஒருவர் வந்துள்ளார் என நினைத்திருப்பேன். அரசியல் என்பது களத்தில் இறங்கிச் செய்வது மட்டுமல்ல, சரியான நேரத்தில் ஓட்டுப் போடுவது கூட நல்ல அரசியல்தான். அதை அவர் செய்தாலே போதுமானது. மற்றபடி அவரது ஆரோக்கியம் ரொம்ப முக்கியமானது. ஆகையால் இந்த முடிவில் விவாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை. அவருடைய உடல்நிலை முக்கியம்".
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago