புதுச்சேரியில் புதிதாக 95 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று(மார்ச் 25) வெளியிட்ட தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,039 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி -67, காரைக்கால் - 24, ஏனாம் - 3, மாஹே - 1 பேர் என மொத்தம் 95 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 679 ஆகவும், இறப்பு சதவீதம் 1.76 ஆகவும் உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 40 ஆயிரத்து 740 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 241 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 431 பேரும் என மொத்தம் 672 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 389 ஆக உள்ளது.
» இது தேர்தல் அல்ல, போர்: தலையை கொடுத்தாவது தமிழகத்தை திமுக பாதுகாக்கும்: ஸ்டாலின் பேச்சு
இதுவரை 6 லட்சத்து 59 ஆயிரத்து 537 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 920 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் 22 ஆயிரத்து 937 பேர் (49 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 9 ஆயிரத்து 238 பேர் (37 நாட்கள்), பொதுமக்கள் 22 ஆயிரத்து 908 பேர் (21 நாட்கள்) என மொத்தம் 55 ஆயிரத்து 83 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago