டெல்லி போன்ற சட்டமாற்றம் புதுச்சேரிக்கு வந்தால் அனைத்து அதிகாரமும் பறிபோகும்; மாநில அந்தஸ்தே தேவை: நாராயணசாமி

By செ.ஞானபிரகாஷ்

டெல்லியை போன்று சட்டமாற்றத்தை புதுச்சேரியில் கொண்டுவந்தால் துணை நிலை ஆளுநரால் அனைத்து அதிகாரமும் தட்டிப்பறிக்கப்படும், அதனால் மாநில அந்தஸ்தை பெறுவதை தவிர வேறு வழியில்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

”டெல்லி அரசின் சட்டத்தை மாற்றி மத்திய அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. டெல்லியில் அமைச்சரவை எடுக்கும் முடிவை துணை நிலை ஆளுநர் அனுமதியில்லாமல் நடைமுறைப்படுத்த கூடாது என அந்த சட்டம் சொல்கிறது. டெல்லி யூனியன் பிரதேச சட்டம் ஷரத்து 4ல் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதன் காரணமாக தேர்வு செய்யப்பட்ட அரசின் உரிமையை பறித்து கொண்டுவிட்டார்கள்.

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அமைச்சரவைக்கு முடிவு எடுக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவந்து பறித்திருக்கிறார்கள். இந்த நிலையை பார்க்கும், போது எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு துணைநிலை ஆளுநர் துணையில்லாமல் எதுவும் செய்ய முடியாது. இதே நிலை வெகு விரைவில் பாஜகவால் புதுச்சேரிக்கு ஏற்படும். என்.ஆர் காங்கிரஸ் மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துகிறார்கள். பாஜக மாநில அந்தஸ்து தேவையில்லை என சொல்பவர்கள்.

நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியை கலைத்த சரித்திரம் பாஜகவுக்கு உண்டு. டெல்லியை போல சட்ட மாற்றத்தை இங்கும் கொண்டு வந்தால் புதுச்சேரி அதிகாரம், முழுமையாக பறிக்கப்படும். அமைச்சரவை எடுக்கும் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.

நியமிக்கப்பட்டவர் மூலம் பாஜக ஆட்சி புதுச்சேரி மாநிலத்தில் கொண்டுவருவார்கள். மக்களின் வாக்குரிமை பறி போய்விடும்.
துணை நிலை ஆளுநரால் அனைத்து அதிகாரமும் தட்டிப்பறிக்கப்படும். எனவே மாநில அந்தஸ்து பெறுவதை தவிர வேறு வழியில்லை. எனவே புதுச்சேரி மாநில மக்கள் இதனை எதிர்க்க வேண்டும்.

ஆதார் எண்ணோடு இணைந்துள்ள தொலைபேசி எண்களை பெற்று பிரசாரம் செய்கிறார்கள். மிக தெள்ளத், தெளிவாக எப்படி பாஜகவுக்கு எண்கள் சென்றது- யார் கொடுத்தது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. செல்போன் எண்கள் பகிரப்பட்டதன் மூலமாக நிர்வாகத்தின் திறமையின்மையை காட்டுகிறது.

10 சதவீத இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையென மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிப்படை உரிமையை மட்டுமல்ல. மக்களின் அதிகாரத்தையும் பாஜக பறிக்கிறது. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் யூனியன் பிரதேசம் என்ற வார்த்தையை ராகுல் காந்தி நீக்குவார்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்