திண்டுக்கல் மாவட்டத்தில், 2019-ம் ஆண்டு உதயநிதி மனுவாங்கினார், திமுக மூத்த உறுப்பினரான பெரியசாமி மூலையில் நாற்காலியைப் போட்டு உட்காந்து கொண்டிருக்கிறார், அவருடைய வயது என்ன, இவருக்கு பேரன் மாதிரி உதயநிதி. தி.மு.கவின் நிலைமை பரிதாப நிலைக்குச் சென்றுவிட்டது, இந்த தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி மு. பழனிசாமி திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:
ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் பொய்யைத்தான் பேசிவருகின்றார். பொய்யை மட்டுமே முலதனமாகக் கொண்டுள்ளார். பொய் பேசி பிழைப்பு நடத்தி வரும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான். உண்மையே அவரது வாயிலிருந்து வராது. உண்மைக்கும் ஸ்டாலினுக்கும் வெகுதூரம்.
ஸ்டாலின் போகும் இடங்களிலும் திண்ணையில் பெட்ஷீட் விரித்து போட்டு, அமர்ந்து கொண்டு பெட்டியை வைத்து பொதுமக்களிடம் குறை கேட்கின்றாராம். ஸ்டாலின் மக்கள் யாருக்காவது குறை இருக்கிறதா என்று கேட்டு குறை இருப்பவர்கள் மனுக்களை பெட்டியில் போடுங்கள் என்று சொல்கிறார். மனுக்களை பெட்டியில் போட்டவுடன் பூட்டி, சீல் வைத்து அவர் எடுத்துச் சென்று விடுவாராம். அவர் முதல்வரானதும் 100 நாட்களில் பெட்டியை திறந்து குறைகளை தீர்ப்பாராம். எவ்வளவு கதை அளக்கிறார் பாருங்கள். யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்?
இது நவீன காலம். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் முதல்வரானால் தானே அந்த பெட்டியை திறக்க முடியும். நீ முதலமைச்சர் ஆகப்போவதும் இல்லை, பெட்டியை திறக்கப் போவதும் இல்லை.
இந்த திண்டுக்கல் மாவட்டத்தில், 2019ஆம் ஆண்டு உதயநிதி மனுவாங்கினார். எந்தப் பதவியிலும் இல்லாத உதயநிதி மனு வங்கினார். திமுக மூத்த உறுப்பினரான பெரியசாமி மூலையில் நாற்காலியைப் போட்டு உட்காந்து கொண்டிருக்கிறார். அவருடைய வயது என்ன? இவருக்கு பேரன் மாதிரி உதயநிதி. தி.மு.கவின் நிலைமை பரிதாப நிலைக்குச் சென்றுவிட்டது. இந்த தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2019ஆம் ஆண்டு வாங்கிய மனு என்னா ஆயிற்று மக்கள் கேட்கிடு வாங்கிய மனு என்னா ஆயிற்று மக்கள் கேட்கிறார்கள் இப்போது. மக்களை ஏமாற்றி, குழப்பி நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்து, தமிழ்நாட்டு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் இல்லை. மக்களுக்காக ஏதும் செய்யாத கட்சி தி.மு.க.
இந்தப்பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி, விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம், சொட்டுநீர் பாசன திட்டம், இடுபொருள் மானியம் ஆகியவற்றை வழங்கினோம். தொழில் வளம் சிறக்க தடையில்லா மின்சாரம் வழங்கினோம்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஜவுளிப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலை கிராமங்களில் மத்திய அரசினுடைய வனத்துறை அனுமதி பெற்று தார்சாலை அமைக்கப்படும். நத்தம் பேரூராட்சியில் மின்மயானம் அமைக்கப்படும். நத்தம் - திண்டுக்கல் இருவழிச்சாலை திருச்சி நான்கு வழிச்சாலையுடனும், மதுரை திண்டுக்கல் சாலையுடனும் இணைக்க புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நத்தம் நகரில் உள்ள குப்பைக் கிடங்கு, ஊருக்கு வெளியே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் அமைக்கப்படும். நத்தம் பேரூராட்சி தரம் உயர்த்தப்பட்டு நகராட்சி ஆக்கப்படும். அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago