மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளாராக நடிகை ஸ்ரீபிரியா போட்டியிடுகிறார். இவர் அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, மயிலாப்பூர் பகுதியில் நேற்று வழக்கம்போல் அவர் வாக்குசேகரித்தார்.
அப்போது பேண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. இதை பார்த்து அங்கு வந்த இளைஞர் ஒருவர் வந்து இசைக்கு தகுந்தவாறு குத்தாட்டம் போட்டார். பின்னர், அவர் ஸ்ரீபிரியாவிடம் சென்று செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டார். சுதாரித்துக் கொண்ட ஸ்ரீபிரியா தேர்தலின்போது பணம் கொடுக்க கூடாது என கூறினார். பின்னர், பாதுகாப்புக்காக வந்த போலீஸார் அந்த இளைஞரை அங்கிருந்து லாவகமாக அப்புறப்படுத்தினர்.
விசாரணையில் சம்பந்தப்பட்ட இளைஞர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பதும், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் என்பதும், மருத்துவர்களிடம் சொல்லாமல், கையில் பேண்ட்டேஜ்வுடன் மருத்துவமனையில் இருந்துவெளியே வந்து நடிகை ஸ்ரீபிரியா பிரச்சாரத்துக்கு வருவதை அறிந்து அவரை பார்க்க வந்தவர், இசை வாத்தியங்கள் உற்சாகத்தில் நடனமாடியுள்ளார் என தெரியவந்துள்ளது. குத்தாட்டம் போட்ட அந்த இளைஞரால் பிரச்சார பகுதியில் உற்சாகம் ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago