வாக்காளரின் ஆதார் தகவல் அரசியல் கட்சிகளுக்கு எப்படிக் கிடைத்தது?- தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி 

By செய்திப்பிரிவு

புதுச்சேரி தேர்தலில் வாக்காளர்கள் செல்போன் எண்ணை ஆதார் மூலம் பெற்றுப் பிரச்சாரம் செய்வதாகவும், அதுகுறித்து சிறப்புப் புலனாய்வு விசாரணை தேவை என்றும் வழக்குத் தொடரப்பட்டது. வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு எப்படிச் செல்கிறது என்று தேர்தல் ஆணையத்தைக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள புதுச்சேரியில், பாஜக சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் ஆரம்பித்துப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி மட்டும் இடம் பெற்றிருக்கும். மொபைல் எண் இடம் பெறாது என்பதால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் குறுந்தகவல் மூலம் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணையக் கோரி பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும். ஆதார் விவரங்களைப் பெற்றுப் பிரச்சாரம் செய்வது குறித்து சிறப்புப் புலன் விசாரணைக் குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவித்துள்ளேன்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மனுதாரர் அளித்த புகார் சைபர் குற்றப் பிரிவு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்குக் கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சி எப்படி வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற முடிந்தது, அதை எப்படிப் பயன்படுத்தலாம் எனக் கேள்வி எழுப்பினர்.

நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரமும் உள்ள தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சி என்பதால் அமைதி காக்கிறதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது சம்பந்தமாக மார்ச் 26-ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்