இளைஞர்களான புதிய வாக்காளர்களின் வாக்குகளைக் கவர்ந்திடும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய், ஆன்ட்ராய்டு செயலி மூலம் டிஜிட்டல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஏப்ரல் 6ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 19 வயதிலிருந்து 28 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 1 கோடியே 33 லட்சத்து 7 ஆயிரத்து 79 பேர் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் கணக்கெடுத்துள்ளது.
இவர்கள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளதாக அரசியல் கட்சியினரும் கருதுகின்றனர்.
இதற்காக இளைஞர்களைக் கவரும் வகையிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என அரசியல் கட்சியினர் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளனர்.
» பிரதமரைத் தெரியாது எனக் கூறிய சிறுவன்; பாடம் எடுத்த காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா
அந்த வகையில் இணையதளத்தை அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்களின் வாக்குகளைப் பெறும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய், ஆன்ட்ராய்டு செயலி (tinyurl.com/ponnuthai4tpk) ஒன்றை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் முயற்சியில் உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
தற்போதைய காலத்திற்கேற்றவாறு டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த ஆன்ட்ராய்டு செயலியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கைகள், பரப்புரைப் பிரச்சாரங்கள், வாக்காளர்கள் கோரிக்கையை தெரிவிக்கும் வசதியும் அதில் உள்ளன.
இளைஞர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் ஆன்ட்ராய்டு செயலியை வெளியிட்டு டிஜிட்டல் முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago