தமாகா மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கோவை தங்கம் சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக இணைந்தார்.
தமாகா சார்பாக அதிமுகவின் கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்திய கோவை தங்கம். வால்பாறை தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அதிமுகவே அந்த தொகுதியை தன்வசம் வைத்துக் கொண்டது.இதனால் கோவை தங்கம் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் தமாகாவில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்தார். இந்தநிலையில் கோவை தங்கம் சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக இணைந்தார்.
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமாகா மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கோவை தங்கம் சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக இணைந்தார்.
அவருடன் த.மா.கா. மாநிலப் பொதுச் செயலாளர் ஞானசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சேலம் மத்திய மாவட்ட தலைவருமான அன்பழகன், மாநிலச் செயலாளர்கள் பொன்.ஆனந்தகுமார், ராஜ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சூலூர் சட்டமன்றத் தொகுதி சுல்தான்பேட்டை யூனியன், அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ராஜேந்திரன், அ.ம.மு.க. மாநில சிறுபான்மைப் பிரிவு இணைச்செயலாளர் மருத்துவர் தாரா ஷபி, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago