காரைக்குடியில் மாறிப்போன அரசியல் களம்: தொகுதியில் மகனோடு பம்பரமாய் சுற்றி வரும் சிதம்பரம்

By இ.ஜெகநாதன்

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அரசியல் களம் மக்களவைத் தேர்தலைப் போல காணப்படுகிறது. காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜாவும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் மாங்குடியும் போட்டியிடுவதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும் இத்தொகுதியில் 1996, 2006, 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2001-ல் ஹெச்.ராஜாவும், 2011-ல் அதிமுகவைச் சேர்ந்த சித.பழனிச்சாமியும் வெற்றி பெற்றுள்ளனர்.

2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம், பாஜக சார்பில் நின்ற ஹெச். ராஜாவை வென்றார்.

இந்நிலையில், இத்தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஹெச்.ராஜாவை, தங்களது ஆதரவாளர் மூலமே தோற்கடிக்க ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் தொகுதி முழுவதும் பம்பரமாகச் சுற்றி வருகின்றனர்.

அதேபோல் ஹெச்.ராஜாவுக்காக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோரும் காரைக்குடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பிரச்சாரம் செய்தனர். இதனால் இத்தேர்தல் ப.சிதம்பரத்துக்கும், ஹெச்.ராஜாவுக்குமான தேர்தலாக மாறியுள்ளது.

மேலும் ஆட்சி அமைக்கப் போட்டியிடும் அதிமுக, திமுகவை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, காங்கிரஸை பாஜகவினரும், மத்திய அரசை காங்கிரஸூம் மாறி மாறி கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இதன் மூலம் காரைக்குடி தொகுதி தேர்தல் களம் சட்டப்பேரவைத் தேர்தல் போல் அல்லாமல் மக்களவைத் தேர்தல் போல மாறியுள்ளது.

மேலும் இத்தொகுதியைக் குறித்து வைத்து ஓராண்டுக்கு முன்பே அதிமுகவினர் பணிகளைத் தொடங்கினர். அத்தொகுதியை ஹெச்.ராஜா தட்டிப் பறித்ததால் அதிமுகவினர் இத்தேர்தலில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் தரப்பில் கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ ஆதரவாளரான வேலுச்சாமிக்கு சீட் கிடைக்காததால் ஒரு தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.

இதையடுத்து வேட்பாளர்கள் ஹெச்.ராஜாவும், மாங்குடியும் பிரச்சாரப் பணிகளோடு, அதிருப்தியாளர்களை சரிக்கட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்