தமிழகத்தில் உள்ள கோயில் களுக்கு திமுக ஆட்சியில்தான் நன்மை கிடைத்துள்ளது என திருவண்ணாமலை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் திருவண் ணாமலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் தரன், மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும் போது, “தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், அதன் மூலம் அதிமுக கட்சியை அவர்கள் கைப்பற்றி விடுவார்கள். தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை தோற்கடிப்பதன் மூலம், அதிமுகவை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். தமிழகத்தில் ஊடுருவி, திராவிட இயக்கத்தை அழிக்க நினைக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மண்ணை காப்பாற்றுவோம்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலை, மத்திய தொல்லியல் துறை மூலம் பாஜக அரசு கைப்பற்றியது. பின்னர், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முயற்சியால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அண்ணாமலையார் கோயில் மீட்கப்பட்டது. பராசக்தி படத்தில், கோயில்கள் கூடாது என்பதல்ல, கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என கருணாநிதி தெரிவித்தார். அவரது ஆட்சி காலத்தில்தான், ரூ.8,484 கோடியில் 432 கோயில் களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.மேலும், ஓடாமல் இருந்த திருவாரூர் கோயில் தேரையும் ஓடச் செய்தார். கிராமப்புற கோயில்களில் பூசாரி களை நியமித்து, அனைத்து கோயில்களையும் புத்துணர்வு பெற செய்தார். திமுக ஆட்சியில்தான், தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு நன்மை கிடைத்துள்ளது.
ஜெயலலிதா ஆன்மா மன்னிக்குமா?
பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால், அவரது வழியில் ஆட்சியையும், கட்சியை யும் நடத்துகிறோம் எனக் கூறும் முதல்வர் பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
அவரது கட்சியில் உள்ளவர்கள் மோடிதான் டாடி என்கிறார்கள். ஜெயலலிதா ஆன்மா உங்களை மன்னிக்குமா?. தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரும்போது, பாரதியார் பாடல் பாடியும், திருக் குறளை கூறியும், ஔவையாரின் ஆத்திச்சூடியை பாடுகிறார். தமிழ் மீது அக்கறை இருந்தால், தமிழை ஆட்சி மொழி ஆக்குவீர்களா?. பெரியார் மண்ணில் பாஜக காலூன்ற முடியாது.
திருவண்ணாமலையில் போட்டி யிடும் பாஜகவை டெபாசிட் இழக்க செய்து, அக்கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.
கூட்டத்தில் மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago