புதுச்சேரி தேர்தல்: காரைக்கால் மாவட்டக் களத்தில் 45 வேட்பாளர்கள்

By வீ.தமிழன்பன்

நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடக் கூடிய இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று (மார்ச் 22) இரவு வெளியிடப்பட்டது. அதன்படி சுயேச்சைகள் உள்ளிட்ட 45 பேர் போட்டியிடுகின்றனர்.

நெடுங்காடு (தனி) தொகுதி: ஏ.மாரிமுத்து (காங்கிரஸ்), சந்திர பிரியங்கா (என்.ஆர்.காங்கிரஸ்), அ.அருள் பிரகாஷ் (பகுஜன் சமாஜ் கட்சி), டி.ராஜேந்திரன் (அமமுக), வி.கீதா (நாம் தமிழர்), ஏ.ஞானசேகரன் (தேமுதிக) மற்றும் 3 சுயேச்சைகள் என 9 பேர் போட்டியிடுகின்றனர்.

திருநள்ளாறு தொகுதி: ஆர்.கமலக்கண்ணன் (காங்கிரஸ்), ஜி.என்.எஸ்.ராஜசேகரன் (பாஜக), மு.சிக்கந்தர் பாஷா (நாம் தமிழர்), கே.குரு சிந்தா (தேமுதிக), தர்பாரண்யம் (அமமுக) மற்றும் 4 சுயேச்சைகள் என 9 பேர் போட்டியிடுகின்றனர்.

காரைக்கால் வடக்கு தொகுதி: ஏ.வி.சுப்பிரமணியன் (காங்கிரஸ்), பி.ஆர்.என்.திருமுருகன் (என்.ஆர்.காங்கிரஸ்), மு.முகமது தமீம் கனி(எஸ்.டி.பி.ஐ), இ.அனுஷியா (நாம் தமிழர்), பி.அருளானந்தம் (இந்திய ஜனநாயக கட்சி), கே.சுரேஷ் (மக்கள் நீதி மய்யம்), ஏ.வேலுச்சாமி (தேமுதிக) மற்றும் 3 சுயேச்சைகள் என 10 பேர் போட்டியிடுகின்றனர்.

காரைக்கால் தெற்கு தொகுதி: ஏ.எம்.எச்.நாஜிம் (திமுக), கே.ஏ.யு.அசனா (அதிமுக), மரிய அந்துவான் (நாம் தமிழர்), சே.முகமது சித்திக் (அமமுக), அ.நெப்போலியன் (இந்திய ஜனநாயக கட்சி), ஆர்.ஜெகதீசன் (தேமுதிக) மற்றும் 2 சுயேச்சைகள் என 8 பேர் போட்டியிடுகின்றனர்.

நிரவி-திருப்பட்டினம் தொகுதி: எம்.நாக தியாகராஜன் (திமுக), வி.எம்.சி.எஸ்.மனோகரன் (பாஜக), அ.முகமது யூசுப் (நாம் தமிழர்), ஏ.அருள் ராஜூ (தேமுதிக), சி.பால தண்டாயுதபாணி (அமமுக), எஸ்.செல்லமுத்து (இந்திய ஜனநாயகக் கட்சி) மற்றும் 3 சுயேச்சைகள் என 9 பேர் போட்டியிடுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்