திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் காட்டுமன்னார்கோவில், வானூர், செய்யூர், அரக்கோணம், நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, ஒரு அரசியல் கட்சி சார்பில் அந்த மாநிலத்தின் மொத்த தொகுதிகளில் 5 சதவீத தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பொது சின்னம் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி 12 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பொதுச்சின்னம் கிடைக்கும். ஆனால், விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், அக்கட்சி திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இருப்பினும் அக்கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கோரி வந்தது. இந்நிலையில், நேற்று தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டன. இதில், விசிக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அதன் வேட்பாளர்களுக்கு பானை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை, பின்பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அச்சின்னத்தை ஒதுக்கியுள்ளனர்.
முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மோதிரம் சின்னத்தில் விசிக போட்டியிட்டது. அமமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி, தமிழகத்தில் 6 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு அமமுகவின் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago