ஆந்திர சிறைகளில் வாடுவோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை: முதல்கட்டமாக 152 தமிழர்கள் விரைவில் ஜாமீனில் விடுதலை

By டி.செல்வகுமார்

செம்மரம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்டவர்களில் முதல்கட்டமாக 152 பேரை ஜாமீனில் விடுவிப்ப தற்கான நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. ஆந்திராவில் உள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அதற் கான மனுதாக்கல் செய்யப்பட் டுவிட்டதால், அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங் களைச் சேர்ந்த ஏழை தொழிலாளர் கள் ஒப்பந்த அடிப்படையில் வனங் களில் பணிக்காக ஆந்திரா செல் கின்றனர். அவர்களில் பலர் செம் மரம் கடத்தியதாக கைது செய்யப் பட்டு திருப்பதி, காளஹஸ்தி, கடப்பா, சித்தூர் ஆகிய இடங் களில் உள்ள சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர். இவர்களை விடு வித்து தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்களது குடும்பத் தினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர்.

இவ்வாறு பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து வழங்கப் பட்ட கோரிக்கை மனுக்கள் அங்கி ருந்து தலைமை செயலகத்துக்கு அனுப்பப்பட்டன.

பின்னர் தலைமை செயலகத்தில் இருந்து அந்த மனுக்கள் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதை யடுத்து ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவரும் உயர் நீதிமன்ற நீதிபதியு மான சதீஷ் அக்னி கோத்ரி, நிர்வாக உத்தரவு வழங்கினார். அதையடுத்து ஆந்திர மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு கோரிக்கை மனுக்களுடன், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரும் கடிதமும் அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் ஒப் பந்த அடிப்படையில் வனங்களில் பணிக்காக ஆந்திராவுக்கு வந்த போது கைது செய்யப்பட்டனர். அவ்வாறு சிறையில் அடைக் கப்பட்டுள்ள 516 பேரையும் விடு விக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வுக்கு தமிழக முதல்வர் ஜெய லலிதா கடிதம் எழுதினார்.

இதையடுத்து அதற்கான நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.

ஆந்திர மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த வழக் கறிஞர்கள், முதல்கட்டமாக திருப் பதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 152 பேரை விடுவிப்பதற்காக சம்பந் தப்பட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தனர். இத னால் அவர்கள் விரைவில் விடுவிக் கப்படுவார்கள் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இரண்டாவது கட்டமாக திருவண்ணாமலையைச் சேர்ந்த 110 பேர், வேலூரைச் சேர்ந்த 71 பேர், விழுப்புரத்தைச் சேர்ந்த 82 பேர் உள்பட 314 பேரை விடுவிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் காளஹஸ்தி சிறையில் 102 பேரும், திருப்பதி சிறையில் 147 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட 314 பேரையும் ஜாமீனில் விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள நிர்வாக அனுமதியை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான சதீஷ் அக்னி கோத்ரி வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக ஆந்திர மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு நாளை (நவம்பர் 23) முறைப்படி கடிதம் அனுப்பப்படுகிறது. இதை யடுத்து 314 பேரை ஜாமீனில் விடுவிப் பதற்கான மனுக்கள் அந்தந்த நீதிமன் றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, அவர்களும் விரைவில் விடுவிக்கப் படுவர் என்று உயர் நீதிமன்ற நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்