சிங்கம்புணரி அருகே கொள்ளைபோகும் பாலாறு: தேர்தல் சமயத்தில் மணல் கடத்தல் அதிகரிப்பு

By இ.ஜெகநாதன்

தேர்தல் சமயத்தைப் பயன்படுத்தி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பாலாற்றில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது.

பாலாறு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மலைக்குன்றங்களில் இருந்து தொடங்கி சிங்கம்புணரி அணைக்கரைப்பட்டி வழியாக விருசுழி ஆற்றில் சேருகிறது.

அணைக்கரைப்பட்டி வழியே செல்லும் பாலாற்றில் மணல் கடத்தல் அதிகளவில் நடந்து வந்தது. இதனால் நீரின் உறிஞ்சும் தன்மை குறைந்து, நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டது.

கிராமமக்கள் புகாரையடுத்து மணல் கடத்தலை அதிகாரிகள் தடுத்து வந்தனர். தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதால் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதை பயன்படுத்தி மணல் கடத்தல் கும்பல் பாலாற்றில் 200 மீ., நீளத்திற்கு 20 அடி ஆழத்திற்கு மணலை அள்ளி கடத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘‘ எங்கள் பகுதியில் முக்கிய நீராதாரமாக பாலாறு உள்ளது. இரவு நேரங்களில் லாரிகளில் மணலை கடத்தியுள்ளனர். இதனை தடுக்க அதிகாரிகள் இரவில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்,’ என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்