மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை அண்ணாநகர் தொகுதி வேட்பாளார் பொன்ராஜுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே, சென்னை வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபு கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இரண்டாவதாக சென்னை அண்ணாநகர் தொகுதியின் மநீம வேட்பாளார் பொன்ராஜுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தைத் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த வாரம், மநீம தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டபோது அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் பொன்ராஜூம் இருந்தார். இருப்பினும், கமல்ஹாசன் முதல் தவணை கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்குக் கரோனா தொற்று உறுதியானது தொடர்பாக பொன்ராஜ் தனது முகநூல் பக்கத்தில், "அன்பு நண்பர்களே,
நான் கடந்த 4 நாட்களாக, தொடர்ந்து தூக்கமில்லாத இரவுகளால், தேர்தல் பணிகளால் உடல்நலம் சரி இல்லாமல் காய்ச்சலுக்கும், உடம்பு வலிக்கும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன். எனக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இக்கட்டான தேர்தல் நேரத்தில் குறுகிய காலத்தில், நான் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டிய நிலையில் அண்ணா நகர் தொகுதி மக்களை சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.
ஆனால் களத்தில் மக்கள் நீதி மையத்தின் படைவீரர்கள் அண்ணா நகர் தொகுதி முழுக்க உங்கள் வீடு தேடி வந்து உங்களை சந்திப்பார்கள். அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றி.
நான் நேரடியாக வர முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன் கூடிய சீக்கிரம் குணமடைந்து தேர்தலுக்கு முன்பாக உங்களை வந்து கண்டிப்பாக சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு நான் வர இயலாத சூழ்நிலையை பொறுத்தருள வேண்டுகிறேன்.
ஆனால் தொடர்ந்து சோசியல் மீடியா, டிவி, YouTube மூலம் தமிழக மக்களை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
ZOOM MEETING மூலம் நான் அண்ணா நகர் தொகுதி மக்களோடு கலந்துரையாட ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்யப்படும்.
மிக்க நன்றி
வெ. பொன்ராஜ்
அண்ணா நகர் தொகுதி
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்" என்று பதிவிட்டுள்ளார்.
வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ்பாபுவுக்காக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சந்தோஷ் பாபுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வேட்பாளருடன் வாக்காளர்கள் தொலைபேசி வழியாக தொகுதி சார்ந்த பிரச்சினைகளை எடுத்துரைக்க 9445947070 என்ற தொலைபேசி எண் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago