அதிமுக, திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளபடி பெண் பயணிகளுக்கான சலுகையால் போக்குவரத்துக் கழகம் மேம்படும்: துறை வல்லுநர்கள் நம்பிக்கை

By கி.ஜெயப்பிரகாஷ்

அரசு பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு சலுகை வழங்குவதாக அதிமுக, திமுக வாக்குறுதி அளித்திருப்பதால், அரசு போக்குவரத்து கழகங்கள் மேம்படும் என்று போக்குவரத்து துறை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவை கடந்த 2020 செப்.1-ம்தேதி முதல் படிப்படியாக தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது90 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், பயணிகள் எண்ணிக்கை, வசூலில் கரோனா காலத்துக்கு முந்தைய நிலையை எட்ட முடியவில்லை.

இதற்கிடையே, சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக, திமுகசார்பில் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில்,‘அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவீத கட்ட சலுகைவழங்கப்படும்’ என்று அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில், ‘அரசு உள்ளூர் டவுன் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது,அரசு போக்குவரத்து கழகங்களின்வருவாயைப் பெருக்குவதோடு, மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்என்று போக்குவரத்து துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

சென்னை ஐஐடி பேராசிரியர்:பெண்கள் வேலை நிமித்தமாக பேருந்துகளில் பல இடங்களுக்குச் செல்கின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் பெண் வாக்காளர்களைக்கவரும் வகையில் கட்டண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தஅறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும்போது, அரசு பேருந்துகளில் பெண்பயணிகள் எண்ணிக்கை அதிகரிக் கும். அதுபோல, அரசிடம் இருந்துஇதற்கான மானியத் தொகையும் கிடைக்கும் என்பதால், போக்குவரத்து கழகங்கள் வருவாயையும் அதிகரித்துக் கொள்ள முடியும்.சொந்த வாகனப் பயன்பாடும் குறையும்.

ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள்: அரசு பேருந்துகளில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகர பேருந்துகளில் கடந்த 2017-ல் தினமும் 47 லட்சம் பேர் பயணம் செய்தனர். இருசக்கர வாகனம், கார் போன்றசொந்த வாகனங்கள் படிப்படியாகஅதிகரித்ததால், பேருந்துகளில் செல்பவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது தினமும் சராசரியாக 20 லட்சம் பேர்வரை மட்டுமே பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

எனவே, அதிமுக, திமுக எனயார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களதுதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்போது அரசு பேருந்துகளில் பெண் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல, டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சிகள் அறிவித்துள்ளதால், அரசு போக்குவரத்துக் கழகங்களின் செலவும் ஓரளவுக்கு குறையும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்