ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் விரிவாக்கப்பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்: அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதி

By செய்திப்பிரிவு

ஈரோடு மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக் கும் விரைவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் தெரிவித்தார்.

ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் நேற்று, சூரியம்பாளையம், நரிப்பள்ளம், அம்மன் நகர், கொங்கம் பாளையம், மாமரத்துப்பாளையம், கருப்பகவுண்டன்புதூர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், புதைவட மின் கேபிள் திட்டம், மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட நீர் தற்போது வீடுகளுக்கு வழங்கப்படுவதால், மாசற்ற குடிநீர் ஈரோடு மக்களுக்கு கிடைத்து வருகிறது. ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மூலம், விரிவாக்கப்பகுதிக்கும், விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீரப்பன்சத்திரம் – கோபி இடையே நான்கு வழிச்சாலை, பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவை அமைக்கப்படும். இதன் மூலம் விசைத்தறி, அதனைச் சார்ந்த சாய, சலவை தொழில்கள் தடையின்றி நடக்கும்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள பெண் களுக்கு மாதம் ரூ.1500 ஊதியம், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தின் போது முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்