திருப்பத்தூர் தனியார் கல்லூரியில் 2 பேராசிரியர்கள், 2 சமையலர்கள் மற்றும் 12 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்லூரி விடுதியில் தங்கியுள்ள 450 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன கல்லுப்பள்ளியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாணியம்பாடி நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. கல்லூரி மாணவியுடன் தொடர்பில் இருந்த 45 மாணவி களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அங்கு தூய்மைப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் 2 பேராசிரியர்களுக்கு நேற்று முன்தினம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, அதேகல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் 6 மாணவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கல்லூரி விடுதியில் தங்கியுள்ள சுமார் 450 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அதே விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு கண் காணிப்பு வளைத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதில், விடுதியில் தங்கியிருந்த 6 மாணவர்கள், 2 சமையல் காரர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் 8 பேரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் தெளித்தனர்.
இதற்கிடையே திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 7,695-ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 4,49,917 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று குணமடைந்த 7,536 பேர் வீடு திரும்பியுள்ளனர். அரசு மருத்துவமனையில் 29 பேர் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர்.
சுகாதார அலுவலர் எச்சரிக்கை
திருப்பத்தூரில் கரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (மார்ச் 22) முதல் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளாத வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோர் களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வணிக நிறுவனங் களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி சுகாதார அலுவலர் ராஜ ரத்தினம் எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago