பாஜக கூட்டணி ஆட்சிக்கு கவுண்ட் டவுன் தொடக்கம் என கட்சி அலுவலகத்தில் தகவல் பலகைகயில் நாட்களை குறிப்பிட்டு தொண்டர்களை நிர்வாகிகள் குஷிபடுத்துகின்றனர்.
புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என கட்சி தலைமை தீவிரமாக உள்ளது. பாஜக பொறுப்பாளர்கள் புதுவையில் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வாக்கு சேகரிப்பு, தலைவர்கள் பிரச்சாரம் என முழுவீச்சில் பணிகள் நடந்து வருகிறது.
எல்லைபிள்ளை சாவடியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் தரை தளத்தில் தேர்தல் அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம் கூடுகிறது. கட்சி அலுவலகம் வரும் தொண்டர்களை உற்சாகப்படுத்த நோட்டீஸ் போர்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவதற்கான கவுண்ட்டவுன் தினசரி எழுத்தப்படுகிறது. நேற்றைய தினம் பாஜக கூட்டணி ஆட்சி அமைய இன்னும் 16 நாட்களே உள்ளன என எழுதப்பட்டிருந்தது.
அத்துடன் பல இடங்களில் இத்தகவல் நோட்டீஸாகவும் ஒட்டிவைக்கின்றனர். இதுபற்றி விசாரித்தபோது, "தொண்டர்களை உற்சாகப்படுத்த கவுண்ட் டவுன் நோட்டீஸாகவும், தகவல் பலகையிலும் எழுதுகிறோம். இதை பார்த்து தொண்டர்கள் பணிகளில் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர்" என்று குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago