புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியாளர்கள் அதிக தொகுதிகளில் சுயேச்சை களாக களம் இறங்குவதால் ரங்கசாமி அழைத்து சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா என கட்சி நிர்வாகிகள் காத்துள்ளனர்.
புதுவை சட்டப்பேரவை தேர் தலில் என்ஆர் காங்கிரஸ், பாஜக,அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. கூட்டணியி ல் பாஜக, அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் என்ஆர் காங்கி ரஸ் அதிருப்தியாளர்கள் சுயேச்சைகளாக களம் இறங்கியுள்ளனர். இதனால் பாஜக, அதிமுக வேட்பாளர்கள் கடும் அதிருப்தியடைந் துள்ளனர்.
பாஜக போட்டியிடும் காலாப் பட்டு, திருநள்ளாறு, அதிமுக போட்டியிடும் முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை ஆகிய தொகுதிகளில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலும் வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியாளர்கள் சுயேச் சைகளாக களம் இறங்கியுள்ளனர். பாகூரில் முன்னாள் அமைச்சர் தியாகராஜன், திருபுவனையில் முன்னாள் அமைச்சர் அங்காளன், மணவெளியில் குமரகுரு, சுரேஷ் ஆகியோர் சுயேச்சைகளாக போட் டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இது என்ஆர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றியை பாதிக்கும் என கருதப் படுகிறது. இதனால் ரங்கசாமி அதிருப்தியாளர்களை அழைத்து சமாதானம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களிடம் பேசி வேட்பு மனுக்களை வாபஸ்பெற செய்ய வும் வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago