54 வயதான திருப்புவனம் முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு தபால் வாக்கு: முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக புகார்

By செய்திப்பிரிவு

கரோனா அச்சம் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தபால் வாக்கு மூலம் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மானாமதுரை தொகுதி திருப்புவனத்தைச் சேர்ந்த திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன் (61), அவரது மனைவியும் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான வசந்தி (54) ஆகியோருக்கு தபால் வாக்கு அளிக்க தேர்தல் அதிகாரிகள் படிவம் வழங்கினர். குறைவான வயதுள்ளோருக்கு தபால் வாக்குக் கொடுத்து முறைகேடு செய்ய உள்ளதாக தேர்தல் அதிகாரிகளிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ வாக்காளர் பட்டியலில் உள்ள வயது அடிப்படையில்தான் தபால் வாக்குப் படிவம் கொடுக்கிறோம். சிலருக்கு வயதில் தவறு இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது.

இதேபோல் 80 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, வாக்காளர் பட்டியலில் குறைவான வயது இருந்தால் படிவம் கொடுக்க முடியாது. அவர்கள் ஏற்கெனவே வயதைச் சரி செய்திருக்க வேண்டும். தபால் வாக்கு தேவையில்லாதோர் திருப்பிக் கொடுத்துவிடலாம். தபால் வாக்கு மூலம் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை, என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்