கரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கியவர் ஸ்டாலின்: அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்

By செய்திப்பிரிவு

‘‘கரோனா காலத்தில் கூட முதல்வர் பழனிசாமி சிறப்பாக செயல்பட்டுமக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டார். ஆனால், கரோனாவுக்கு பயந்து ஸ்டாலின் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்’’ எனஅமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரான அவர் நேற்று காலைதங்கப்பன் நகர், லாயல் மில் காலனி,சண்முகா நகர், கூசாலிபட்டி ஆகியபகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது ஒரு வீட்டில் உள்ள சிறுமி கொடுத்த இரட்டை இலையை பெற்றுக் கொண்ட அமைச்சர், ‘‘தேர்தலில் வெற்றிபெற்றவுடன் முதலில் வந்து உன்னை சந்திக்கிறேன்’’ என அந்தச்சிறுமியிடம் கூறினார்.

பின்னர் மாலையில் பூசாரிபட்டி, வடக்கு இலுப்பையூரணி, லிங்கம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

கரோனா காலத்தில் கூட முதல்வர் பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு மக்களைக் காக்கும்பணியில் ஈடுபட்டார். ஆனால், கரோனாவுக்கு பயந்து ஸ்டாலின் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். தனது கட்சி நிர்வாகிகளைக் கூட காணொலி மூலமாகத்தான் சந்தித்துப் பேசினார்.

தீப்பெட்டித் தொழிலுக்கு பிரச்சினை வந்தபோதும் பக்கபலமாக செயல்பட்டது அதிமுக. தீப்பெட்டித் தொழிலுக்கான ஜி.எஸ்.டி. வரியை18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைப்பதற்காக தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் டெல்லி சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசஏற்பாடு செய்தேன். அதன் பலனாக, ஜி.எஸ்.டி., வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.

தமிழகத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி. இருவரில் ஒருவர் தான் முதல்வர் ஆக முடியும். மற்றவர்களைப் பற்றி பேச தயாராக இல்லை என்றார்.

பிரச்சாரத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கணேஷ்பாண்டியன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் ராமச்சந்தி ரன், பாஜக மாவட்டப் பொதுச் செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்