திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அமமுக, சமக வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 24 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து வேட்பாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார்நாகேந்திரன், திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் உள்ளிட்ட 40 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வேட்புமனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
பரிசீலனையின்போது பாஜக, திமுக வேட்பாளர்கள் உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், அமமுக வேட்பாளர் பாலகிருஷ்ணன் என்ற பால்கண்ணன், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனர் மாரியப்ப பாண்டியன் உள்ளிட்ட 24 பேரின் வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பழவூர் அருள்மிகு நாறும் பூநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா திருக்கொடியேற்றத்ததுடன் நேற்று தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து பாலகிருஷ்ணன், அழகேசன், மாரியப்ப பாண்டியன் ஆகியோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார் அங்குவந்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
இதைத் தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர் சுபத்திரன் குப்தா கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். இச் சம்பவத்தால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago