பிரதமர் மோடி வரும் 30ம் தேதி புதுச்சேரி வருகிறார். ஏஎப்டி திடலில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் உரையாற்றுகிறார்.
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே பிரச்சாரம் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி., பாஜக பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, "புதுச்சேரிக்கு தொடர்ந்து முக்கியத் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகின்றனர். வரும் 22-ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதுச்சேரி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். வரும் 24-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். வரும் 30-ம் தேதியன்று பிரதமர் மோடி புதுச்சேரி வருகிறார்.
ஏஎப்டி திடலில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். முக்கியத் தலைவர்கள் பலரும் பல்வேறு நாட்களில் புதுச்சேரிக்குப் பிரச்சாரத்துக்காக வருகின்றனர்" என்று ராஜீவ் சந்திரசேகர், செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago