கந்தர்வக்கோட்டை அருகே ரூ.5.91 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

By கே.சுரேஷ்

கந்தர்வக்கோட்டை அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.91 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தச்சன்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (மார்ச் 20) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலம் மாவட்டத்திலிருந்து தனியார் நகை நிறுவனத்துக்குச் சொந்தமான தங்க நகைகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை சோதனை செய்தனர்.

அப்போது, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளில் உள்ள இவர்களுக்கு சொந்தமான நகைக் கடைகளுக்குக் கொடுப்பதற்காக ரூ.5 கோடியே 91 லட்சம் மதிப்பிலான நகைகள் இருந்தன. உரிய ஆணவங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட இந்த நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கந்தர்வக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கருணாகரனிடம் ஒப்படைத்தனர்.

இதை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ஆய்வு பெய்தார். மேலும், சம்பவம் குறித்து நகை விநியோகிப்பு முகவரான சேலம் மாவட்டம் சின்ன வீராணம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் மோகன் மற்றும் வாகன ஓட்டுநர் மேச்சேரி தேவராஜன் மகன் சந்தோஷ்குமார் ஆகியோரிடம் தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்