கமல் ஓய்வு; காலில் மீண்டும் வீக்கம்: இன்றைய பிரச்சாரத்தில் மாற்றம்

By செய்திப்பிரிவு

கமலுக்கு அறுவை சிகிச்சை செய்த காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் ஓய்வில் இருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார் கமல்ஹாசன். மேலும், தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியிலும் வாக்குச் சேகரித்து வருகிறார்.

கோவையில் காலையில் நடைப்பயிற்சி செல்லும்போது வாக்குகள் சேகரித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதேபோல், இன்று (மார்ச் 20) காலை கோவை பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் பகுதியில் கமல்ஹாசன் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அவருடன் பேசவும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் பொதுமக்கள் கூடினர். அப்போது அவருடைய காலை கூட்டத்தில் இருந்தவர்கள் மிதித்துள்ளனர். அதிலும் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காலிலேயே மிதித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் கமலுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டார் கமல்ஹாசன். காலில் வீக்கம் இருப்பதால், கண்டிப்பாக ஓய்வு அவசியம் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் ஓய்வில் இருக்கிறார். ஆகையால், இன்று திட்டமிடப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் மாற்றங்கள் இருக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்