ஒவ்வொரு வேட்பாளரையும் அறிமுகம் செய்து வைக்கும் வீடியோ ஒன்றை மக்கள் நீதி மய்யம் கட்சி உருவாக்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஓர் அணி உருவாகியுள்ளது. இதில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கூட்டணியின் வேட்பாளர்களுக்காக கமல்ஹாசன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுக்காகத் தனித்தனியாக பிரத்யேக வீடியோ ஒன்றைத் தயார் செய்துள்ளனர்.
இதில் அந்த வேட்பாளரை அறிமுகப்படுத்தி, மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் லைட்டை அனைவருக்கும் கமல் கொடுக்கிறார். இந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.
» ஜெயலலிதா மரணத்துக்கு திமுகதான் காரணம்: துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம்
» ஆயிரம் விளக்கு தொகுதிக்கு திமுக என்ன செய்தது?- குஷ்பு கேள்வி
இதுபோன்று தனித்தனியாக வேட்பாளரை அறிமுகம் செய்து வைக்கும் வீடியோவை, தமிழகத்தில் இதர கட்சிகள் செய்யவில்லை. இதுவொரு புதிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி கமல் வெளியிட்டுள்ள சில வீடியோக்கள் இதோ:
எக்மோர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் பிரியதர்ஷிணி. வழக்கறிஞரான இவர் பேரிடர் காலங்களில் ஆற்றிய சேவைகள் போற்றுதலுக்குரியவை. எக்மோர் தொகுதியை மேம்படுத்தவும், வறியோர் வாழ்வு மேம்படவும் இவரை வெற்றி பெறச் செய்யுங்கள். pic.twitter.com/cPvXFhCi7F
— Kamal Haasan (@ikamalhaasan) March 18, 2021
தாம்பரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சிவ இளங்கோ. சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், ஊழலுக்கு எதிரான சட்டப் போராட்டங்களையும் நிகழ்த்தி வருபவர். டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். pic.twitter.com/lmujvOZCSo
— Kamal Haasan (@ikamalhaasan) March 18, 2021
திருச்சி கிழக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் வீரசக்தி. ஃபார்மா துறையில் நெடிய அனுபவம் மிக்கவர். பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பொதுத்தொண்டு செய்பவர். உடல் உறுப்பு தானம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கியவர். இவரை வெற்றி பெறச் செய்யுங்கள். pic.twitter.com/Dt4lLMGoEf
— Kamal Haasan (@ikamalhaasan) March 18, 2021
ஆர்.கே. நகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஃபாஸில். மக்களுக்கான நற்பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். கோவிட் கால போராளி என்று ஊடகங்களால் போற்றப்பட்டவர். ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு இவரைப் பெருமையுடன் பரிசளிக்கிறேன். வாக்களித்து கோட்டைக்கு அனுப்புங்கள். pic.twitter.com/AFVtEoLIFE
— Kamal Haasan (@ikamalhaasan) March 18, 2021
மயில்வாகனன் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கவேண்டும் எனும் கனவோடு உழைப்பவர். செய்யாறு தொகுதியை வளர்ச்சியடைச் செய்ய புதுமையான பல திட்டங்களோடு மக்கள் பணி செய்ய வந்திருக்கும் இந்த இளைஞரைப் பரிசளிக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள். pic.twitter.com/gSp1AeiCRv
— Kamal Haasan (@ikamalhaasan) March 18, 2021
மேதகு அப்துல்கலாமின் ஆலோசகராகப் பல்லாண்டு பயணித்த பொன்ராஜ் அண்ணா நகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர்.வறுமையை ஒழிக்க 15 மாநில முதல்வர்களுக்கு செயல்திட்டம் வகுத்துக்கொடுத்தவர்.தன் அறிவாலும் அனுபவத்தாலும் அண்ணாநகர் தொகுதியை வளம் கொழிக்கச் செய்ய துடிப்புடன் இருக்கிறார்.அவரை ஆதரியுங்கள். pic.twitter.com/6ODYRDhJeG
— Kamal Haasan (@ikamalhaasan) March 18, 2021
ரமேஷ் கொண்டல்சாமி மாதவரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர். பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவி வகித்த அனுபவம் கொண்டவர். விருப்ப ஓய்வு பெற்று மக்கள் பணி செய்யவந்திருக்கிறார். நேர்மையின் துணையோடு வந்திருக்கும் அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். pic.twitter.com/Sryypwl0cr
— Kamal Haasan (@ikamalhaasan) March 18, 2021
ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்து தன் பதவியை ராஜினாமா செய்த நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு வேளச்சேரி தொகுதியின் வெற்றி வேட்பாளர். அவரை வெற்றி பெறச் செய்வது வேளச்சேரி தொகுதி மக்களின் கடமை. பெருமை. pic.twitter.com/Z1Op22z3Bl
— Kamal Haasan (@ikamalhaasan) March 18, 2021
திருவண்ணாமலை தொகுதியின் மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி வேட்பாளர் இரா. அருள். இன்னமும் பின்தங்கிய தொகுதியாகவே அறியப்படும் திருவண்ணாமலையை தமிழகமே திரும்பிப் பார்க்கச் செய்யும் எண்ணற்ற திட்டங்களை வகுத்துள்ளார். நேர்மை, திறமை, அஞ்சாமை கொண்ட இரா. அருளுக்கு வெற்றியைப் பரிசளியுங்கள். pic.twitter.com/4WIXB3UJnD
— Kamal Haasan (@ikamalhaasan) March 18, 2021
திண்டுக்கல் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ராஜேந்திரன். திண்டுக்கல் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வேட்கை கொண்டவர். இவரை வெற்றி பெறச் செய்யும்படி திண்டுக்கல் தொகுதி மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/RpfXAYqG1g
— Kamal Haasan (@ikamalhaasan) March 18, 2021
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago