பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து சுதந்திர கொடியை ஏற்றிய வேலூர், சுலபத்தில் யாருக்கும் இடம் கொடுப்பதில்லை. இது சங்கப் பலகை மற்றவர்களுக்கு இடம் கொடுக்காது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர் கார்த்திகேயன் அறிமுகக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்பேசும்போது, ‘‘வேலூருக்கு மற்ற ஊரை விட ஒரு சிறப்பு உண்டு. வெள்ளைக்காரன் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று எல்லா ஊரிலும் கொடி நாட்டி வந்தான். ஆனால், வேலூரில் எங்கள் மண்ணில் பிறந்தவன் தான் ஆள வேண்டும். அந்நியனுக்கு இடமில்லை என்று அந்நியனின் கொடியை வெட்டி எறிந்த ஊர் வேலூர். முதன் முதலாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து சுதந்திர கொடியை ஏற்றிய ஊர்.
இங்கு சுலபத்தில் யாருக்கும் இடம் கொடுப்பதில்லை. இந்த மண்ணின் வாசனையோடு இருப்பவருக்குத் தான் இடம் கொடுக்கும். இது சங்கப் பலகை மற்றவர்களுக்கு இடம் கொடுக்காது. இந்த தேர்தல் மகத்தான ஜனநாயகத்தை காக்கின்ற தேர்தல். இந்தியாவில் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக கண்ணை மூடிக்கொண்டு கோமா நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சுதந்திரத்தை விரும்புபவர்கள் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வரவேண்டும் என கருதுகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த பத் தாண்டு கலாம் இருண்ட ஆட்சி நடந்துள்ளது. இங்குள்ள ஞான சேகரனும், நானும் கருணாநிதி, ஸ்டாலினிடம் சென்று மன்றாடி வேலூருக்கு காவிரி தண்ணீரை கொண்டு வர கேட்டோம். மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்று ரூ.2 ஆயிரம் கோடி வாங்கி வந்து இந்த திட்டத்தை தொடங் கினார். ஆனால், எங்களை தோற்கடித்தீர்கள். ஆட்சிக்கு வந்த கட்சி இந்த திட்டத்தை ஒழுங்காக செய்திருந்தால் எல்லா கிராமங்களுக்கும் தண்ணீர் போயிருக்கும். கடந்த பத்தாண்டு களாக அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. காவிரியை பார்க்காத உங்கள் வீட்டு புழக்கடையில் காவிரி தண்ணீரை கொட்டிய கட்சி திமுக.
வேலூருக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆயிரம் கோடிக்கு செலவு செய்து எங்காவது ஒரு தெரு முழுக்க சாலை அமைத் திருப்பதை காட்டினால், நான் ஒப்புக்கொள்கிறேன். அந்தப் பணம் எங்கே போனது. மாநகராட்சியில் சாலைகளே காண வில்லை. இப்படிப்பட்ட ஆட்சி நீடிக்க வேண்டுமா? என நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
உங்கள் ரத்தத்தில் திமுக அலை ஓயாமல் ஓடுவது உண்மையானால், அண்ணா, கலைஞர் தந்த பகுத்தறிவு சூடு தணியாமல்ரத்தத்தில் இருக்குமேயானால் கோபத்தை மறந்து பாசத்தை காட்டுங்கள். சண்டையை நிறுத் துங்கள். அதை தேர்தலுக்குப் பிறகு தொடருங்கள். பொதுச் செயலாளர் என்ற முறையில் சொல்கிறேன். திமுக துரோகிகளுக்கு இடம் கொடுக்காது. கழகத்துக்கு துரோகம் நினைத்தவர்களை 12 மணி நேரத்துக்குள் தூக்கி எறியப்படு வார்கள். பகைமையை மறந்து வெற்றிபெற்றால் வீரர்கள். தோற்றால் அடிமையிலும் கேவலமானவர்கள்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago