புதுச்சேரியில், கரோனா அதிகரிப்பால் வரும் 22-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் நலன் கருதி துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கும் கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வரும் 22ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை விடுமுறையாக இருக்கும்.
9-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை மாணவர்களின் தேர்வு அண்டை மாநிலக் கல்வி வாரியங்களால் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆதலால் அக்கல்வி வாரியங்களின் வழிகாட்டுதலின்படி இந்த வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு பின்பு எடுக்கப்படும். அதுவரை வாரம் 5 நாட்கள் பள்ளிகள் இயங்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago