நெல்லையில் 5 தொகுதிகளில் 188 வேட்புமனுக்கள் தாக்கல்: கடைசி நாளில் திரண்ட சுயேச்சைகள்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 188 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான இன்று ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை அளித்தனர்.

மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேற்று வரையில் மொத்தம் 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான இன்று மட்டும் 89 பேர் வேட்புமனுக்களை அளித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சுயேச்சைகள்.

மாவட்டத்தில் தொகுதி வாரியாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம்:

அம்பாசமுத்திரம்:

இசக்கிசுப்பையா (அதிமுக), ஆவுடையப்பன் (திமுக), சி. ராணி ரஞ்சிதம் (அமமுக), சி. கணேசன் (மக்கள் நீதி மய்யம்), செண்பகவள்ளி (நாம் தமிழர் கட்சி), எம். சுரேந்திரன் (புதிய தமிழகம்)

நாங்குநேரி:

கணேசராஜா (அதிமுக), ரூபி மனோகரன் (காங்கிரஸ்), பரமசிவஐயப்பன் (அமமுக), சார்லஸ் ராஜா (மக்கள் நீதி மய்யம்), வீரபாண்டி (நாம் தமிழர் கட்சி), அசோக்குமார் (புதிய தமிழகம்), சுப்புலட்சுமி (பகுஜன் சமாஜ்).

பாளையங்கோட்டை:

ஜி. ஜெரால்டு (அதிமுக), அப்துல் வகாப் (திமுக), முகமது முபாரக் (எஸ்டிபிஐ), டி. பிரேம்நாத் (மக்கள் நீதி மய்யம்), ஏ. பாத்திமா (நாம் தமிழர் கட்சி).

திருநெல்வேலி:

நயினார் நாகேந்திரன் (பாஜக), ஏஎல்எஸ் லட்சுமணன் ( திமுக), பி. பாலகிருஷ்ணன் (அமமுக), டி. அழகேசன் (மக்கள் நீதி மய்யம்), சத்யா (நாம் தமிழர் கட்சி).

ராதாபுரம்:

ஐ.எஸ். இன்பதுரை ( அதிமுக), மு. அப்பாவு (திமுக), எஸ். உத்தரலிங்கம் (மக்கள் நீதி மய்யம்), டி. சரவணகுமார் (சமக), ஆர். ஜேசுதாசன் (நாம் தமிழர் கட்சி)

தொகுதி வாரியாக மனு தாக்கல் விவரம் (அடைப்புக்குள் இன்று மட்டும் தாக்கல் செய்த மனுக்களின் எண்ணிக்கை):

திருநெல்வேலி- 40 (21), அம்பாசமுத்திரம்- 38 (22), பாளையங்கோட்டை- 32 (17), நாங்குநேரி- 40 (13), ராதாபுரம்- 38 (16).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்