புதுச்சேரியில் புதிதாக 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 6.50 லட்சத்தை கடந்த பரிசோதனை எண்ணிக்கை

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 61 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. பரிசோதனை எண்ணிக்கை 6.50 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று(மார்ச் 19) வெளியிட்டுள்ள தகவல்:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,347 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-39, காரைக்கால்-15, மாஹே- 7 என மொத்தம் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் மருத்துவமனைகளில் 160 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 157 பேரும் என 317 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 674 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 ஆகவும் உள்ளது. இன்று புதிதாக 21 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 271 (97.54 சதவீதம்) ஆக உள்ளது.

புதுச்சேரியில் 6 லட்சத்து 50 ஆயிரத்து 992 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 4 ஆயிரத்து 397 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இதுவரை 44 நாட்களில் 17 ஆயிரத்து 277 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், 32 நாட்களில் 6 ஆயிரத்து 249 முன்களப் பணியாளர்களுக்கும், 16 நாட்களில் 14 ஆயிரத்து 708 பொதுமக்களுக்கும் என 38 ஆயிரத்து 234 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்