தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். ஆண் வாக்காளர்கள் 4,72,736 - பெண் வாக்காளர்கள் 5,30,828. அதாவது 58,092 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், நடப்பு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.
புதுச்சேரியின் முதல் சட்டப்பேரவையில் (1963 முதல் 1964) பெண் பிரதிநிதிகளாக சரஸ்வதி சுப்பையா, சாவித்திரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2-வது சட்டப்பேரவையில் (1964-68) பத்மினி சந்திரசேகரன், அங்கம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 3-வது சட்டப் பேரவையில் (1969-74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார்.
4-வது, 5-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 6-வது சட்டப்பேரவையில் (1980-83) ரேணுகா அப்பாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சராகவும் இருந்தார். 7-வது சட்டப்பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சட்டப்பேரவையில் செல்வி சுந்தரம் நியமன எம்எல்ஏ-வாக நியமிக்கப்பட்டார். 8-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 9-வது சட்டப்பேரவைக்கு 1991-ல்கே.பக்கிரி அம்மாளும், 10-வது சட்டப்பேரவைக்கு 1996-ல் அரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 11-வது சட்டப்பேரவைக்கு 2001-ல் மேரிதெரசா நியமன எம்எல்ஏ-வாக இருந்தார். அதன்பிறகு பெண் எம்எல்ஏக்கள் யாரும் இல்லை.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 1, காங்கிரஸ் சார்பில் 1, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 2, திமுக சார்பில்,1, பாஜக, பாமக, ஐஜேக என பல்வேறு கட்சிகள் சார்பில் மொத்தம் 12-க்கு மேற்பட்ட பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில், காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வி.விஜயவேணி, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட்ட கோபிகா, நெடுங்காடு (தனி) தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா, திமுக சார்பில் காரைக்கால் நிரவி தொகுதியில் போட்டியிட்ட கீதா ஆனந்தன், உள்ளிட்ட 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 2001-ம் ஆண்டுக்குப் பின் பெண் எம்எல்ஏக்கள் இல்லை என்ற நிலை மாறி, கடந்த முறை 4 பெண்கள் வெற்றி பெற்றனர்.
இம்முறையோ பெண்கள் தேர்தலில் போட்டியிடவே முக்கியக்கட்சிகள் வாய்ப்பு தரவில்லை. அதிமுக,திமுக, பாஜகவில் பெண் வேட்பாளர்கள் ஒருவர் கூட இல்லை. காங்கிரஸில் பெயரளவிற்கு ஒரேயொரு பெண் வேட்பாளராக கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த விஜயவேணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் இதுவரை அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில், 28 தொகுதிகளில் களம் காணும் நாம்தமிழர் கட்சி சரிபாதியாக 14 பெண்களுக்கும், மக்கள் நீதி மய்யம் 3 பெண்களுக்கும் போட்டியிட வாய்ப்புகள் அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago