வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 52 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், விதிகளை மீறி வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள் அழித்தும் பேனர்கள், கொடிகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். மாவட்டத்தில் நேற்று வரை அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் வரையப்பட்ட 1,715 சுவர் விளம்பரங்களை அழித்துள்ளனர். 2,818 சுவரொட்டிகள், 1,188 பேனர்கள், 391 கொடிகளையும் அகற்றியுள்ளனர். தனியார் கட்டிடங்களில் 2,561 சுவர் விளம் பரங்களை அழித்துள்ளனர். 738 சுவரொட்டிகள், 316 பேனர்கள், 574 கொடிகளையும் அகற்றியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக 3 பேர் மீதும், ஊர்வலம் சென்றதாக ஒரு வழக்கும், சாலை மறியலில் ஈடுபட்டதாக 4 வழக்கும், சுவரொட்டி ஒட்டியதாக 3 வழக்கும், சுவர் விளம்பரம் செய்ததாக 36 வழக்கும், கொடி கம்பங்கள் வைத்ததாக 3 வழக்குகள் என மொத்தம் 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 1800-4255-668 அல்லது 0416-2256618 அல்லது 94987-47537 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.17 லட்சம் ரொக்கம் பறிமுதல்
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.17 லட்சத்து ஆயிரத்து 930 பணமும், ரூ.6 லட்சத்து 26 ஆயிரத்து 440 மதிப்பி லான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களும், குடியாத்தம் தொகுதியில் ரூ.8,760 மதிப்பிலான மதுபாட்டில்களும், காட்பாடி தொகுதியில் ரூ.2,050 மதிப்பிலான மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago