புதுச்சேரி அருகே ரூ.2.50 கோடி மதிப்புள்ள 30 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பதுக்கல்; 2 அறைகளுக்கு சீல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி அருகே ரூ.2.50 கோடி மதிப்புள்ள 30 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 அறைகளுக்கு தேர்தல் பறக்கும் படை, காவல்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, புதுச்சேரி முழுவதும் காண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் துறை, காவல்துறை, கலால் துறையினர் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே காட்டுகுப்பம் மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் செட்டாஆப் பாக்ஸ்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று(மார்ச் 18) தேர்தல் துறை பறக்கும் படை அதிகாரி சிவக்குமார், தெற்குப்பகுதி போலீஸ் எஸ்பி லோகேஸ்வரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, சம்மந்தப்பட்ட வீட்டின் மாடியில் உள்ள 2 அறைகளில் 1,500 அட்டை பெட்டிகளில், ஒரு பெட்டிக்கு தலா 20 வீதம், 30 ஆயிரம் செட்டாஆப் பாக்ஸ்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2.50 கோடி ஆகும்.

இதையடுத்து விசாரணையில், ‘‘அந்த வீடு கேபிள் ஆபரேட்டர் ஞானமுரளி என்பவருக்கு சொந்தமானது என்பதும், ஆவனங்களை ஆய்வு செய்த போது, செட்டாஆப் பாக்ஸ்கள், குஜாராத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து புதுச்சேரியில் உள்ள தனியார் கேபிள் டி.வி. ஒளிபரப்பு நிறுவனத்துக்கு வந்திருப்பதும், அவை திருபுவனையில் உள்ள ஒரு குடோனில் வைக்கப்பட வேண்டும்.

ஆனால், அவை அங்கு வைக்கப்படாமல் காட்டுக்குப்பத்தில் உள்ள ஞானமுரளி வீட்டில் வைக்கப்பட்டது’’ என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, செட்டாப் பாக்ஸ் வைக்கப்பட்டிருந்த அறைகளை மூடி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்