புதுச்சேரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தனி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இத்தொகை தனியார்வங்கிக்கு சொந்தமானது என்று கூறப்பட்டாலும், அத்தொகையை அரசு கருவூலத்தில் வைத்துவிட்டு வாகனத்தில் வந்த மூவர் தொடங்கி வங்கி தரப்பிலும் வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தொடர் சோதனைகளில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி இந்திராகாந்தி சிலையிலிருந்து தந்தை பெரியார் நகர்ப் பகுதியில் அங்குள்ள பள்ளி அருகே சென்ற தனியார் வாகனத்தை பறக்கும்படையினர் பிடித்தனர்.
அதில் ஏராமான ரொக்கம் இருந்தது, வங்கிகளில் ஏடிஎம்களில் பணத்தை நிரப்பவும், பணத்தை கொண்டு செல்லவும் பயன்படும் "ரைய்டு சேப்" ரக வாகனமாக இருந்தாலும் தனியார் பாதுகாப்பு நிறுவன பெயரோ, ஏதும் அவ்வாகனத்தில் குறிப்பிடவில்லை.
இதையடுத்து அதில் பயணித்த 3 பேரையும் பறக்கும் படை அதிகாரி பாபு விசாரித்தார். இதையடுத்து அப்பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முகமது மன்சூருக்கு தகவல் தந்தனர். அவர் சம்பவ இடத்துக்கு வந்தார்.
வாகனத்தில் திறந்து பார்த்தபோது ரூ. 100, ரூ. 200, ரூ. 500 ரூபாய் கட்டுகள் பெட்டியில் இருந்தது. தனியார் வங்கியில் இருந்து எடுத்து கொண்டு வங்கிக்கு சொந்தமான கட்டிடத்தில் வைக்கச் செல்வதாக அவ்வாகனத்தில் இருந்தோர் தெரிவித்தனர். ஆனால், அதற்கான உரிய ஆவணங்களும் இல்லை. மொத்தமாக ரூ. 2 கோடி வரை அவ்வாகனத்தில் இருந்தது. அதையடுத்து ரூ. 2 கோடியுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரித்தபோது, "ரூ. 100,ரூ.200, ரூ. 500 என தனித்தனியாக பெட்டியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பெரியதொகை எடுத்துச் செல்லும்போது தேர்தல் துறையில் வங்கிகள் தெரிவித்து விடும். அதுவும் செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. வங்கித்தரப்பையும் வரக்கூறியுள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago