தாராபுரத்தில் வெற்றி உறுதி; வாக்கு வித்தியாசத்தை மட்டுமே பார்க்கிறோம்: மனுதாக்கல் செய்த எல்.முருகன் பேட்டி

By இரா.கார்த்திகேயன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். இதையோட்டி தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11.15 மணிக்கு மனுதாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் பவண்குமார் கிரியப்பனவரிடம் மனுவை அளித்தார். முன்னதாக உடுமலைப்பேட்டை சாலை ரவுண்டானாவில் ஆரம்பித்து, சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். இதில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி பங்கேற்றார்.

ஆனால் அவர் மனுத்தாக்கல் செய்ய உள்ளே செல்லவில்லை. அதிமுகவை சேர்ந்த தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பியுமான மகேந்திரன் உள்ளிட்ட இருவர் மட்டும் உடன் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது:

"தாராபுரம் தொகுதியில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட ஒன்று. வாக்கு வித்தியாசத்தை நாங்கள் பார்க்கிறோம். தாராபுரத்தின் வளர்ச்சி மற்றும் தாராபுரத்தின் மேம்பாடு ஆகியவை தொடர்பாகத்தான் எங்களது செயல்பாடுகள் இருக்கும்" என்றார்.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். டெப்பாசிட் தொகையாக 5 ஆயிரம் ரூபாயை 5 மற்றும் பத்து ரூபாய் என தொண்டர்களிடமிருந்து நன்கொடையாக பெற்ற பணத்தை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்