வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதில்லை என உள்ளூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ முருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேப்பனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் நேற்று குப்பச்சிபாறை கிராமத்தில் ஒன்று கூடினர். இதில் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் கல்யாணி, சூளகிரி கிழக்கு ஒன்றிய நிர்வாகி முனியேகவுடு, வட்டாரத் தலைவர்கள் நாகராஜ், ரவிச்சந்திரன், ராமமூர்த்தி, பைரோஸ், முருகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினரே போட்டியிட்டனர். கூட்டணியில் இருந்த எங்களுக்கு ஆதரவு தரவில்லை. இதனை காங்கிரஸ், திமுக தலைமை கண்டிக்கவில்லை. இதனால் பேரவைத் தேர்தலில் நாங்கள் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை. அறிமுக கூட்டம், பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்ள மாட்டோம். ஆதரவாகவும் செயல்படப் போவதில்லை என முடிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago