ஒரே கூட்டணியில் போட்டியிடும் மாமனார்- மருமகன், தந்தை- மகன், அண்ணன்- தம்பி: புதுச்சேரியில் சுவாரஸ்யம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே கூட்டணியில் மாமனார்- மருமகனும், தந்தை - மகனும், அண்ணன் - தம்பியும் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் தவிர்த்து இதர கட்சிகள் நேற்று இரவு வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதில் சில சுவராசியங்களும் இடம் பெற்றுள்ளன.

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி 1991ம் ஆண்டு தட்டாஞ்சாவடி தொகுதியில் வென்றார். அதிலிருந்து தொடர்ந்து ஏழு முறை போட்டியிட்டு வென்றுள்ளார். தற்போது 8-வது முறையாக போட்டியிடுகிறார். ரங்கசாமிக்குத் திருமணம் ஆகவில்லை. அவரது அண்ணன் மகளைத் திருமணம் செய்து கொண்டவர் நமச்சிவாயம். அவர் காங்கிரஸிலிருந்து தற்போது பாஜகவுக்குச் சென்றுவிட்டார். தற்போது 4-வது முறையாக மண்ணாடிப்பட்டில் போட்டியிடுகிறார். மாமனார்- மருமகனும் ஒரே கூட்டணியில் களம் காண்கின்றனர்.

தந்தை-மகன் பாஜகவில் போட்டி

பாஜக சார்பில் போட்டியிடத் தந்தை, மகனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. காமராஜர் நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார் மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரின் மகன் விவியன் ரிச்சர்ட்ஸ் நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜான்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

அவரின் சொந்தத் தொகுதியான நெல்லித்தோப்பை அப்போதைய முதல்வர் நாராயணசாமிக்காக அவர் விட்டுக் கொடுத்திருந்தார். அதன் பிறகு காமராஜர் நகரில் போட்டியிட்டு ஜான்குமார் எம்எல்ஏ ஆனார். அதைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்த ஜான்குமாருக்கு மீண்டும் காமராஜர் நகரில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதேபோல் தனது மகனைச் சொந்தத் தொகுதியில் களம் இறக்கியுள்ளார். அவர் முதல் முறையாக பாஜகவில் போட்டியிடுகிறார்.

அண்ணன்-தம்பி அதிமுகவில் போட்டி

இதேபோல அதிமுகவில் 3-வது முறையாக அண்ணன், தம்பி இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் 5-வது முறையாக உப்பளம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 4 முறை தொடர்ச்சியாக உப்பளம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது மீண்டும் 5-வது முறையாக அதே தொகுதியில் களம் இறங்கியுள்ளர். இவரின் தம்பி பாஸ்கர் முதலியார்பேட்டை தொகுதியில் 2011, 2016 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது 3-வது முறையாக முதலியார்பேட்டை தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்