தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி போலீஸ் எஸ்ஐ பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னம்பிக் கையுடன் போராடி தடைகளை தகர்த்தெரிந்த ப்ரித்திகா யாஷினி, ‘தான் திருநங்ககைளுக்கு ‘ரோல் மாடலாக’ விளங்குவேன்’ என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் கலையரசன், சுமதி தம்பதியின் இளைய மகனாக பிறந்தவர் ப்ரித்திகா யாஷினி(25). இவரது சகோதரர் ராகுல்குமார் எம்சிஏ முடித்துவிட்டு அரசு பணிக்கான தேர்வுக்கு தயாராகி வருகிறார். ப்ரித்திகா யாஷினி, காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை என்ற சிறப்பு இடத்தை பிடித்து, உயர் நீதிமன்றம் மூலம் எஸ்ஐ பணிக்கு தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து திருநங்கை ப்ரித்திகா யாஷினியிடம் கேட்டபோது, ‘‘நான் சேலம் பழைய சூரமங்க லத்தில் உள்ள நீலாம்பாள் சுப் பிரமணியம் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, சேலம் அரசு கலைக்கல்லூரியில் பிசிஏ பட்டப்படிப்பை முடித்தேன். 10-ம் வகுப்பு படித்தபோது, உடலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்பட்ட பாலின மாற்றத்தை கண்ட றிந்து, திருநங்கையாக உருமாறி னேன். திருநங்கையாக மாறியதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டை விட்டு வெளி யேற்றினர். என் நிலையை பெற்றோ ருக்கு புரிய வைத்து, அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியதன் அடிப்படையில், மீண்டும் அவர்கள் என்னை குடும்பத்துடன் சேர்த்துக் கொண்டனர். இருப்பினும், நான் சென்னை கோவிலம்பாக்கத்தில் சக திருநங்கைகளுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறேன்.
காவல் பணி மீது தீரா ஆசை
இளம் வயதில் இருந்து விளை யாட்டு மீது ஆர்வம் இருந்தாலும், பள்ளி, கல்லூரி காலங்களில் உடல்ரீதியான மாற்றம் என்னை தடுத்து நிறுத்தியது. காவல் பணி மீது எனக்கு தீரா ஆசை என்ப தால், தமிழ்நாடு சீருடை பணியா ளர் தேர்வாணையத்துக்கு விண் ணப்பித்த காலம் முதல் எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத் துவ சோதனை வரை பல்வேறு இடைஞ்சல்களை சந்திக்க நேரிட் டது. தன்னம்பிக்கையுடன் போராடி தடைகளை தகர்த்தெரிய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நீதிமன்ற கதவுகளை தட்டினேன். எஸ்ஐ தேர்வுக்கான விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினத்துக்கான பிரிவு இல்லாததால்; பெண் பிரிவில் கலந்துகொண்டு, வெற்றி பெற் றேன். நேர்மைக்கான பரிசாக சென்னை உயர் நீதிமன்றம் எஸ்ஐ பணி எனக்கு வழங்க உத்தரவிட்டதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
திருநங்ககைளுக்கு நான் ‘ரோல் மாடாலாக’ விளங்குவேன். திருநங்கைகளால் அனைத்து துறைகளிலும் சாதித்துக் காட்ட முடியும் என உலகறியச் செய்து, சக தோழிகளுக்கு முன்னுதாரண மாகவும், அவர்களின் வாழ்வாதாரத் தையும், முன்னேற்றத்துக்கும் ஊக் கம் அளிக்க என்னாலான அனைத்து உதவிகளையும், முயற்சிகளையும் செய்வேன்’ என்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ-யாக பொறுப்பேற்கும் முதல் திருநங்கை ப்ரித்திகா யாஷினி என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago