ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கி கள் வேலைநிறுத்தத்தால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிகளை தனியார்மய மாக்குவதைக் கண்டித்தும், பொதுமக்கள் சேமிப்புப் பணத்தை தனியார் கையாளுவதற்கான விதிகளைக் கைவிடக் கோரியும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் நாடு முழுவதும் நேற்று முன்தினமும் நேற்றும் வேலைநிறுத்தம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் மற்றும் கடந்த சனி, ஞாயிறு வங்கிகள் விடு முறையால் பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அவதி ப்பட்டனர். மேலும் வங்கிகளின் செயல்பாடு முடக்கத்தால் சுமார் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப் பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை அண்ணாநகரில் உள்ள ஐஓபி மண்டல அலுவலகம் முன் வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் சி.தர் தலைமை வகித்தார்.
இதில் என்சிபிஇ மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ஆர்.பரதன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜோசப் சகாயடெல்வர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சண்முகநாதன், வி.செல்வபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
400-க்கும் மேற்பட்ட கிளைகளில் பணியாற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago