தி.மலை தொகுதியில் போட்டியிடும் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ரூ.23.32 கோடி சொத்து

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி சங்கரியிடம் ரூ.23.32 கோடி மதிப்பில் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தன்னிடம் ரூ.9,28,702 மற்றும் மனைவி சங்கரியிடம் ரூ.10,76,280 ரொக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது பெயரில் மூன்று வங்கிகளில் ரூ.4,08,370, ரூ.4,34,327 மற்றும் ரூ.1000 இருப்பு இருப்பதாகவும் மற்றும் மனைவி பெயரில் ஒரு வங்கியில் ரூ.42,652 இருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். 3 தனியார் நிறுவனங்களில் ரூ.1,13,57,588, ரூ.1,68,93,655 மற்றும் ரூ.1 லட்சம் என முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தனது மூலம் தனியார் நிறுவனம் மற்றும் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.1,53,006 மற்றும் ரூ.3 கோடி வழங்கி உள்ளதாகவும், மனைவி மூலம் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.75 லட்சம் வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல், தன்னிடம் ரூ.6,58,750 மதிப்பில் 250 கிராம் தங்கம் மற்றும் மனைவியிடம் ரூ.9,52,000 மதிப்பில் 342 கிராம் தங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் அசையும் சொத்தாக தன்னிடம் ரூ.6,09,35,932 மற்றும் மனைவியிடம் ரூ.95,70,932 இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அசையா சொத்தாக தனது பெயரில் ரூ.8,46,21,000 மதிப்பில் விவசாய நிலம், வீடுகள் உள்ளதாகவும், மனைவி சங்கரி பெயரில் ரூ.7,81,00,000 மதிப்பில் விவசாய நிலம் மற்றும் வீடு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனது மூத்த மகன் குமரனிடம் ரூ.2 கோடி மற்றும் இரண்டு கல்வி அறக்கட்டளையிடம் இருந்து தலா ரூ.4 லட்சம் மற்றும் தனியார் நிறுவனத்தில் ரூ.2 கோடி என மொத்தம் ரூ.4,08,00,000 கடன் வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், தன் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், தனக்கு சொந்தமாக வாகனங்கள் ஏதும் (கார் உட்பட) இல்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 2019-20-ம் நிதியாண்டில் தான் ரூ.19,96,790-ம் மற்றும் மனைவி சங்கரி ரூ.3,39,420 வருமானம் ஈட்டி உள்ளதாக வருமான வரித்துறை கணக்கில் குறிப்பிட்டுள்ளார். எ.வ.வேலு, தனது பெயரிலும் மற்றும் மனைவி பெயரிலும் ரூ.23,32,27,340 மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்