வேளச்சேரி, விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை ஆகிய 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் கட்சி.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு நீண்ட இழுபறிக்குப் பின்னர் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
ஏற்கெனவே 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேளச்சேரி, விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை ஆகிய 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
வேளச்சேரியில் ஹாசன், மயிலாடுதுறையில் எஸ்.ராஜ்குமார், குளச்சலில் ஜெ.ஜி.பிரின்ஸ், விளவங்கோட்டில் சிட்டிங் எம்எல்ஏ விஜயதாரணி ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "கட்சிக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றி உள்ளேன். 10 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு பெண் எம்எல்ஏ நான்தான். எதிர்க் கட்சியில் இருந்தும்கூட ரூ.1,200 கோடி நிதியுதவியைப் பெற்றிருக்கிறேன். கட்சி என்னை நிராகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன்" தெரிவித்திருந்தார்.
25 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் விஜயதாரணி மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்:
பொன்னேரி (தனி) - துரை சந்திரசேகர்
ஊத்தங்கரை - ஜே.எஸ்.ஆறுமுகம்
ஸ்ரீபெரும்புதூர் (தனி) - கே.செல்வப்பெருந்தகை
சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்தினம்
கள்ளக்குறிச்சி (தனி) - கே.ஐ.மணிரத்னம்
ஓமலூர் - ஆர்.மோகன் குமாரமங்கலம்
ஈரோடு கிழக்கு - திருமகன் ஈவேரா
உதகமண்டலம் - ஆர்.கணேஷ்
கோவை தெற்கு - மயூரா எஸ்.ஜெயக்குமார்
உடுமலைப்பேட்டை - கே.தென்னரசு
விருத்தாசலம் - எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன்
அறந்தாங்கி - எஸ்.டி.ராமச்சந்திரன்
காரைக்குடி - எஸ்.மாங்குடி
மேலூர் - டி.ரவிச்சந்திரன்
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - பி.எஸ்.டபிள்யூ மாதவராவ்
சிவகாசி - ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன்
திருவாடனை - ஆர்.எம்.கருமாணிக்கம்
ஸ்ரீவைகுண்டம்: ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்
தென்காசி - எஸ்.பழனி நாடார்
நாங்குநேரி - ரூபி ஆர்.மனோகரன்
கிளியூர் - எஸ்.ராஜேஷ்குமார்
வேளச்சேரி- ஹாசன்
விளவங்கோடு- விஜயதாரணி
குளச்சல்- ஜெ.ஜி.பிரின்ஸ்
மயிலாடுதுறை- எஸ்.ராஜ்குமார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago