புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 27 பேர் வேட்பு மனுத்தாக்கல்: அனைத்து கட்சிகளின் கோடீஸ்வர வேட்பாளர்கள் சொத்து விவரம் வெளியீடு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் 27 பேர் 35 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அனைத்து கட்சியிலும் கோடீஸ்வர வேட்பாளர்களே மனுத்தாக்கல் செய்தனர். குறிப்பாக ரங்கசாமி, கந்தசாமி, ஜான்குமார், சிவா உள்ளிட்ட பலரின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் நேற்று காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 27 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். சிலர் இரு மனுக்களை தாக்கல் செய்ததால் 35 மனுக்கள் வந்துள்ளன. இதில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அசையும், அசையா சொத்து மதிப்புகளின் விவரம் வருமாறு:

ஜான்குமார் (பாஜக): அசையா சொத்து ரூ.17 கோடியே 47 லட்சமும், அவரது மனைவி பெயரில் ரூ.6 கோடியே 58 லட்சமும் உள்ளது. இவரது பெயரில் ரூ.3.46 கோடியும், மனைவி பெயரில் ரூ.1.19 லட்சமும் வங்கி கடன் உள்ளது. ரூ.38 கோடியே 45 லட்சம் அரசுக்கு வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இரண்டு வழக்குகள் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரங்கசாமி (என்ஆர் காங்.,): கையிருப்பில் ரூ.66 ஆயிரமும், எஸ்பிஐ வங்கியில் ரூ.5 ஆயிரமும் உள்ளது. ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 2 பைக்கும், இரண்டு கார்களும் உள்ளன. நகை மற்றும் வங்கி இருப்பு தொகை, கார், பைக் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு ரூ.26 லட்சத்து 22 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.24 கோடி மதிப்பில் விவசாய நிலமும், ரூ.7 கோடியே 62 லட்சம் மதிப்பில் விவசாயமல்லாத நிலம் உள்ளதாகவும், குடியிருப்பு கட்டிடங்களின் மதிப்பு ரூ.38 கோடியே 13 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார். ராஜ்யசபா எம்பி கோகுலகிருஷ்ணனிடம் ரூ.30 லட்சம் உட்பட 7 பேரிடம் ரூ.1 கோடியே 15 லட்சம் கடன் வாங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரங்கசாமியிடம் மொத்தம் அசையும் சொத்து ரூ.25 லட்சத்து 91 ஆயிரமும், அசையா சொத்து ரூ.38 கோடியே 13 லட்சம் உள்ளது.

ஓம்சக்தி சேகர் (அதிமுக): அசையும் சொத்தாக ரூ.2 கோடி 69 லட்சமும், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 27 லட்சமும் உள்ளது. அசையா சொத்து ரூ.10 கோடியே 34 லட்சமும், மனைவி பெயரில் ரூ.2 கோடியே 77 லட்சமும், வங்கி கடன் ரூ.2.24 லட்சமும், மனைவி பெயரில் ரூ.12 லட்சத்து 80 ஆயிரமும் உள்ளது.

ஜான்குமார் மகன் விவியன் ரிச்சர்டு (பாஜக): தனது பெயரில் ரூ.1 லட்சத்து 56 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.75 ஆயிரம் கையிருப்பு உள்ளது. அசையும் சொத்தாக ரூ.1 கோடியே 89 லட்சமும், மனைவி பெயரில் ரூ.2 லட்சத்து 84 ஆயிரமும் உள்ளது. அசையா சொத்தாக ரூ.1 கோடியே 62 லட்சமும், மனைவி பெயரில் ரூ.8 லட்சத்து 25 ஆயிரமும், இவரிடம் வங்கி கடனாக ரூ.81 லட்சமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அனந்தராமன் (காங்.,): அசையும் சொத்தாக ரூ.18 லட்சத்து 64 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.80 லட்சத்து 67 ஆயிரமும் உள்ளது. அசையா சொத்தாக அனந்தராமன் பெயரில் ரூ.1 கோடி 47 லட்சமும், மனைவி பெயரில் ரூ.2 கோடியே 89 லட்சமும், வங்கி கடன் ரூ.1 கோடியே 30 லட்சமும், மனைவி பெயரில் ரூ.3 கோடி 95 லட்சமும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கந்தசாமி (காங்.,): அசையும் சொத்தாக ரூ.11 கோடியே 22 லட்சமும், மனைவி பெயரில் ரூ.59 கோடியே 37 லட்சமும், இரு மகன்களின் பெயரில் ரூ.19 லட்சமும் உள்ளது. அசையா சொத்தாக கந்தசாமி பெயரில் ரூ.30 லட்சமும், மனைவி பெயரில் ரூ.5 கோடியே 76 லட்சமும், இரு மகன்கள் பெயரில் ரூ.1 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரமும் உள்ளது. மனைவி பெயரில் ரூ.1 கோடி 17 லட்சம் நகை மற்றும் வீட்டு கடனும், ஒரு மகன் பெயரில் ரூ.5 லட்சம் வங்கி கடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிவா (திமுக): அசையும் சொத்தாக ரூ.73 லட்சத்து 67 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.2 கோடியே 94 லட்சமும் உள்ளது. அசையா சொத்தாக சிவா பெயரில் ரூ.1 கோடியே 47 லட்சமும், மனைவி பெயரில் ரூ.15 கோடியே 60 லட்சமும், வங்கி கடன் ரூ.53 லட்சத்து 12 ஆயிரமும், மனைவி பெரியல் ரூ.10 லட்சத்து 37 ஆயிரமும் இருப்பதாக கூறியுள்ளார்.

ஏகேடி ஆறுமுகம் (என்ஆர் காங்.,): அசையும் சொத்தாக ரூ.89 லட்சத்து 16 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.22 லட்சத்து 37 ஆயிரமும் உள்ளது. அசையா சொத்தாக ஆறுமுகம் பெயரில் ரூ.1 கோடியே 88 லட்சமும், மனைவி பெயரில் ரூ.13 கோடியே 83 லட்சமும், வங்கி கடன் ஆறுமுகம் பெயரில் ரூ.68 லட்சத்து 62 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 56 லட்சமும் உள்ளது.

ஜெயமூர்த்தி (காங்.,): அசையும் சொத்தாக ரூ.13 லட்சத்து 58 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.24 லட்சத்து 94 ஆயிரமும் உள்ளது. அசையா சொத்தாக ரூ.3 கோடியே 63 லட்சமும், மனைவி பெயரில் ரூ.18 லட்சத்து 75 ஆயிரமும், வங்கி கடன் ரூ.78 லட்சத்து 36 ஆயிரமும் உள்ளது.

வையாபுரி மணிகண்டன் (அதிமுக): அசையும் சொத்து ரூ.23 லட்சத்து 55 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.15 லட்சத்து 70 ஆயிரமும் உள்ளது. இரு மகன்கள் பெயரில் ரூ.65 ஆயிரமும் உள்ளது. அசையா சொத்தாக இவரது பெயரில் ரூ.3 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரமும், ரூ.10 லட்சத்து 42 ஆயிரம் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்