சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் திமுகவில் சீட் கிடைக்காத உள்ளூர் திமுக நிர்வாகிகள் போர்க்கொடியால் முன்னாள் அமைச்சர் தமிழரசிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு மதுரை மாவட்டம் சமயநல்லூர் (தனி) தொகுதியில் வெற்றி பெற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரானவர் தமிழரசி. தொகுதி சீரமைப்பில் சமயநல்லூர் தொகுதி இல்லாமல் போனதால் 2011-ம் ஆண்டு தேர்தலில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) தொகுதியில் தமிழரசி போட்டியிட்டு தோற்றார்.
அப்போதே வெளியூர் நபர் தங்கள் பகுதியில் போட்டியிட விரும்பாத உள்ளூர் நிர்வாகிகள், அவருக்கு சரியாக வேலை செய்யவில்லை என புகார் எழுந்தது.
அதன்பிறகு 2016-ம் ஆண்டு தேர்தலில் தமிழரசி மீண்டும் சீட் கேட்டார். ஆனால் அவருக்கு மறுக்கப்பட்டு சித்ராசெல்விக்கு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மானாமதுரை இடைத்தேர்தலிலும் சீட் கேட்டார். ஆனால் அவருக்கு மறுக்கப்பட்டு இலக்கியதாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டது.
» அதிமுகவில் மீண்டும் நாகராஜனுக்கு சீட் கொடுத்ததை கண்டித்து திமுகவுக்கு மாறிய ஒன்றியக் கவுன்சிலர்
» ' அடிபட்ட புலி ஆபத்தானது': சக்கரநாற்காலியில் அமர்ந்து மம்தா பானர்ஜி பேச்சு
இந்நிலையில் இந்த தேர்தலில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட திமுகவில் 32 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். ஆனால் மீண்டும் தமிழரசிக்கே சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு சீட் கிடைக்காத உள்ளூர் நிர்வாகிகள் சிலர், மதுரையைச் சேர்ந்த தமிழரசிக்கு சீட் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் சமூகவலைதளங்கள் மூலம் தங்களது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் கட்சி தலைமைக்கும் புகார் அனுப்பியுள்ளனர். இதனால் தமிழரசிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உள்ளூர் நிர்வாகிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago