திமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை: சரவணன்

By செய்திப்பிரிவு

திமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சரவணன் தெரிவித்துள்ளார்.

திமுகவிலிருந்து விலகி ஏன் பாஜகவில் இணைந்தீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சரவணன் பதிலளிக்குபோது, “திமுக நிர்வாகிகளிடம் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எங்க ஜனநாயகம் இருக்கிறதோ தற்போது அங்கு வந்துள்ளேன். என்னை சமூக சேவகராக மக்கள் நன்கு அறிவர்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மதிமுக, பாஜக, திமுக என பயணம் செய்த டாக்டர் சரவணன் தனக்கு திருப்பரங்குன்றத்தில் வாய்ப்பு வழங்காமல் தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதால் அதிருப்தியில் மீண்டும் பாஜகவுக்கு தாவினார். இன்று காலை பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன், மருத்துவரான இவர் ஆரம்ப காலத்தில் சில பொதுச் சேவைகளை தொகுதியில் செய்து வந்த நிலையில் 2013-ம் ஆண்டு மதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2014 மக்களவை தேர்தலில் மதிமுக, பாஜக, தேமுதிக, பாமக கூட்டணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாஜக தலைவர்களிடையே பரிச்சயம் ஏற்பட்டது.

பின்னர் 2015-ம் ஆண்டு மதிமுகவிடம் பிணக்கு ஏற்பட்டு பாஜகவுக்கு சென்றார், பின்னர் 2016-ல் அங்கிருந்து திமுகவுக்கு தாவினார். அங்கு அவருக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவருக்கு ஜெயலலிதா கைரேகை வைத்தது செல்லாது என வெற்றியை எதிர்த்து சரவணன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு நடக்கும்போதே ஏ.கே.போஸ் மரணமடைந்ததால் 2019-ம் ஆண்டு மீண்டும் இடைத்தேர்தல் நடந்தது.

அதில் சரவணனுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வெற்றிப்பெற்றார். இந்த நிலையில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த மதுரை வடக்கு தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்