புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதிதாக 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயர் அருண் இன்று (மார்ச் 14) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,075 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 12 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும் என மொத்தம் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாம், மாஹேவில் யாருக்கும் தொற்று இல்லை.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 92 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 98 பேரும் என 190 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் காரைக்கால் திருநள்ளார் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 671 ஆக அதிகளித்துள்ளது. இறப்பு விகிதம் 1.68 ஆகவும் உள்ளது. இன்று 15 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 169 (97.85 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் இதுவரை 12 ஆயிரத்து 831 சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், 4 ஆயிரத்து 659 முன்களப் பணியாளர்களுக்கும், 8 ஆயிரத்து 675 பொதுமக்களுக்கும் என 26 ஆயிரத்து 165 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago