கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர், கடும் கெடுபிடிகளை கையாள்கின்றனர். நடப்புத் தேவைகளுக்கும், வர்த்தக பரிமாற்றங்களுக்கும் எடுத்துச் செல்லும் பணத்தைக் கூட பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்கின்றனர் என்று பொது மக்கள், வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தேர்தல் அறிவிப்பு வந்தாலே, அனைவருக்கும் நினைவில் வருவது ‘எந்தக் கட்சி வெற்றி, எந்தக் கட்சிக்குத் தோல்வி’ என்ற ஆருடம் தான் நினைவுக்கும் வரும். இதையொட்டிய செய்திகள் முன்நிறுத்தப்படுவதுண்டு. வெற்றி - தோல்விக்கு முன் அணி மாறுவது, ஆள் சேர்ப்பது, பிரச்சாரம், தகராறு, பிரச்சினை என்று களை கட்டும். இந்தச் செய்திகளே ஆக்கிரமித்திருக்கும்.
ஆனால், இந்த முறை அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமீறல்களை கண்காணிக்கும் பறக்கும் படையின் செயல்பாடுகள் குறித்த செய்திகளே கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த வாரத்தில் அதிகம் இடம் பெறுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்ட மறுகனமே தேர்தல் பறக்கும் படையும் அமைக்கப்பட்டு அவர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடுவது நடைமுறைக்கு வந்து விட்டது. இது ஆரோக்கியமான வரவேற்க வேண்டிய விஷயமே.
எந்த ஒரு தவறும் நடக்காமல், நேர்மையான முறையில் இந்த ஜனநாயக திருவிழா நடந்து முடிக்கப்பட வேண்டும். என்று மிகப் பொறுப்புடன் பறக்கும் படையினர் கடைபிடிக்க வேண்டிய விதிகளை தேர்தல் ஆணையம் முறை யாக வகுத்து கொடுத்துள்ளது.
அதன்படி,பறக்கும்படை நிலை கண்காணிப்புக் குழுவின் பொறுப்பு அலுவலராக இருக்கும் செயல்துறை நடுவர் அந்தஸ்தில் இருப்வர் மட்டுமே சோதனை, வாகனத் தணிக்கை செய்ய வேண்டும். அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டுமே தவிர தன்னிச்சையாக செயல்படக் கூடாது. வாகனத்தில் பெண்கள் இருந்தால் அவர்களை பெண் காவலர்களை கொண்டே சோதனையிட வேண்டும். பணியில் கண்ணியத்துடனும், மரியாதை யுடனும் நடந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆணையத்தின் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணியில் ஈடுபடும் கண்காணிப்புக் குழுவினர், வாகனத் தணிக்கையின் போது வாகனங்களை நிறுத்துவதில் பாரபட்சம் காட்டுவதாக வாகனச் சோதனைக்குள்ளாகும் பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.
வாகனத் தணிக்கைக்கு உட்படும் வாகனங்கள் பெரும்பாலும் குடும்பமாக செல்வோர், வர்த்தகர்கள், அலுவலகம் செல்வோர், வங்கிக்கு பணம் செலுத்த செல்வோர், வங்கி ஏடிஎம்-களில் பணத்தை நிரப்பும் வாகனங்கள் போன்றவற்றை கண்காணித்து சோதனையிடுகின்றனர்.
அதே நேரத்தில் அரசியல் கட்சிக் கொடி கட்டிச் செல்லும் வாகனங்களைக் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
அரசியல் பிரமுகர்கள் எந்த வழியில் எப்படி பணத்தை எடுத்துச் செல்வர் என்பது பொது மக்களை விட பறக்கும் படையில் இடம்பெற்றிருக்கும் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் காவல்துறை ஊழியர்களுக்கு நன்றாகவே தெரியும். ‘சோதனை’ என்ற பெயரில் அப்பாவி மக்களிடம் தங்களின் அதிகாரத்தை வெளிப்படுத்துவது தாங்க முடியவில்லை.
“இரு தினங்களுக்கு முன் கடலூர் எல்லையில் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில், ‘சோதனை செய்கிறோம்’ என்ற பெயரில் வாகனங்களை நிறுத்தியதில் சுமார் 1.கி.மீ தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது, அப்பகுதி மக்களை சங்கடத்திற்கு ஆளாக்கியது.
போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடத்தில் வாகனச் சோதனை செய்யும் முன் சற்று யோசித்து பிற வாகனங்களுக்கு வழிவிட்டு சோதனை நடத்த திட்டமிடாதது ஏன்?” என்கிறார் வடலூரைச் சேர்ந்த வர்த்தகர் ஞானசேகரன்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பறக்கும் படையின் பாரபட்சமான செயல்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி முறைப்படுத்த வேண்டும் என்று பரவலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago