காற்று மாசுபாட்டை குறைக்க சுத்தமான காற்று திட்டம்: ரூ.451 கோடியில் நிறைவேற்ற மதுரை மாநகராட்சி முடிவு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் காற்று மாசுபாட்டை 70 சதவீதம் குறைக்க ரூ.451 கோடியில் சுத்தமான காற்று திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி ஆய்வறிக்கை தயாரித்துள்ளது.

நாடு முழுவதும் காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரங்களைத் தேர்வு செய்து, அந்த நகரங்களில் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், சுத்தமான காற்று பொதுமக்களுக்கு கிடைக்கவும் மத்திய அரசு சுத்தமான காற்று திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

தமிழகத்தில் 2017-ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் காற்று மாசுபாடு அதிகமுள்ள சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடியில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 2017-ம் ஆண்டு ஆய்வின்படி காற்றில் மாசு துகள்களின் அளவு 67.1 மைக்ரோ கிராம் எனத் தெரிய வந்துள்ளது.

மதுரையில் ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கு மேலான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் வெளியிடும் புகை மற்றும் கட்டுமானப் புழுதியால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

இந்தக் காற்று மாசுப்பாட்டை 70 சதவீதம் குறைக்க ரூ.451 கோடியில் சுத்தமான காற்று திட்டத்தை மதுரையில் செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசின் சுத்தமான காற்று திட்டம் அடிப்படையில் மதுரையில் காற்று மாசுபாட்டை 2025-ம் ஆண்டுக்குள் 70 சதவீதம் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். 2021-ம் ஆண்டில் 31 சதவீதம், 2022-ல் 45 சதவீதம், 2023-ல் 55 சதவீதம், 2024-ல் 65 சதவீதம், 2025-ல் 70 சதவீதம் காற்று மாசு குறைக்கப்படும்.

அதற்காக காற்று மாசு அதிகமுள்ள சாலைகள், நகர்ப்புறச் சந்திப்புகளில் காற்று சுத்திகரிப்பு அமைப்புகள் நிறுவப்படும்.

இந்த அமைப்பு காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வாயுக்களில் உள்ள நச்சுப் பொருட்களை குறைத்து காற்றை சுத்தப்படுத்தும்.

கட்டுமான கழிவுப் பொருட்களை அதே இடத்தில் மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், இனி கட்டப்படும் எந்த ஒரு கட்டிடமும் காற்றோட்டமான வகையில் இடம் விட்டு கட்டினால்தான் மாநகராட்சி அனுமதி வழங்கும். மத்திய அரசுக்கு இந்தத் திட்டத்தைத் தயாரித்து அனுப்பியுள்ளோம். மத்திய அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கியவுடன் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்